கனிமொழியால் தான் மு.கருணாநிதி முதல்வராக வாய்ப்பு வந்தது – எண் ஜோதிடம் சொல்லும் ரகசியம்

0
D1

எண் 5க்கான உதாரணங்கள்…

கனிமொழி (5-1-1968) பிறந்த எண் 5

எண் 5 எதிரியே இல்லா எண் ஆகும். இவ்வெண்ணில் பிறந்தால் பெற்றோருக்கோ அல்லது அவர்கள் சார்ந்து இருப்பவர்களுக்கோ அதிர்ஷ்டம். கனிமொழி பிறந்தது 5ம் தேதி அவர் பிறந்த பிறகுதான் தந்தை மு.கருணாநிதி முல்வராக வாய்ப்பு வந்தது. அதனால் தான் அவர் கனிமொழி மீது அலாதி பாசம் வைத்து இருந்தார். இப்பொழுது அவர் தன் சகோதரர் ஸ்டாலினைச் சார்ந்துள்ளதால் அவருக்கு லாபம்.
கனிமொழியின் பிறந்த தேதி கூட்டு எண் 3. இது தேவ குருவை குறிக்கும் இவ்வெண் படி மூத்தோர் சொல் தட்ட மாட்டார்கள் அதனால் தான் தகப்பனாருக்கு பின் அண்ணண் சொல் கேட்கிறார்.

D2

இவர்கள் ஆலோசனை சொல்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இளகிய மனம் படைத்த இவர்கள் தன்னிடம் வருபவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் அவர்களை முன்னேற்றுபவர்களாகவும் இருப்பார்கள். இவ்வெண் இந்தியாவிற்கு ராசியான எண்ணாகும், அதனாலேயே இவர் மாநிலங்களவை உறுப்பினராக சிறந்து விளங்குகிறார். இவர் முதல் முறை எம்பியா தேர்ந்தெடுக்கப்பட்ட போது பெயரின் கூட்டு எண் 3 வரும்படி KANIMOZHI KARUNANITHI(அப்போது, வெளிவந்த ஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றில் கனிமொழிகருணாநிதி என குறிப்பிடப்பட்ருந்தது)

(2+1+5+1+4+7+7+5+1+2+1+2+6+5+1+5+1+4+5+1=66, 6+6=12=1+2=3) பின்பற்றினார். பின்னர், சில சர்ச்சைகளின் காரணமாக அதை மாற்றினார்.

 

பெயர் எண் 6 (KANIMOZHI= 2+1+5+1+4+7+7+5+1=33=3+3=6)

N2

இவ்வெண் இந்தியாவிற்கு எதிர் அதனால் தான் பிறந்த தேதி கூட்டு எண் 3 இருந்தும் இந்த எண்ணால் 2G வழக்கில் சிறைசென்றார். அதாவது எண் 3 எண் 6ஐ அவமானப்படுத்தும்.
திமுகவில் பெயர், பிறந்த தேதி கூட்டு உள்ள 6ம் எண் காரர்கள் தனியாகவும், எண் 3 உள்ளவர்கள் தனியாகவும் வைத்திருந்தார் கருணாநிதி, அவருடைய எண் கணிதத்தை பொருத்தவரையில் இவ்விரு எண்களும் அவருக்கு ராசியான எண்ணாகும்.

 

உதாரணமாக, 6ம் எண் கொண்ட கனிமொழி, ராஜா, திருச்சி சிவா ஆகியோர் ஒர் அணியாகவும், 3ம் எண்ணைக்கொண்ட கே.என்.நேரு, அன்பில் பெரியசாமி, மு.அன்பழன், அன்பில் தர்மலிங்கம், ஆற்காடு வீராசாமி ஆகியோரை ஒர் அணியாகவும் வைத்திருந்தார்.
அதேபோல், கருணாநிதி ஆட்சி காலத்தில் அவர் அருகில் முக்கிய பொறுப்பு அதிகாரிகளும் 3 எண் காரர்களே. முன்னாள் போலீஸ் கமிஷனர் T.Rajendran(4+2+1+1+5+5+4+2+1+5 =30=3), முன்னாள் டி,ஜி.பி Jagan M.Seshadri (1+1+3+1+5+4+3+5+3+5+1+4+2+1=39=3+9=3).

கூட்டு எண் 5 காரர்

திருச்சி, தஞ்சை திருமண்டலத்தின் CSI தேவாலயத்தின் பேராயராக இருக்க வேண்டும் என்றால் பிறந்த தேதி கூட்டு எண் அல்லது பிறந்த தேதி + மாதம் + வருடம் மூன்றையும் கூட்டினால் வரும் எண் அல்லது பெயரின் கூட்டு எண் 3 அல்லது 8 வரவேண்டும். அவ்வாறு வந்தால் அந்த பாதிரியார் CSI திருச்சி, தஞ்சை திருமண்டலத்தில் பிஷப் பதவிக்கு போட்டியிடலாம்.
உதாரணமாக, இதற்கு முன்னதாய் பதவி வகித்த பேராயர்களின் பெயரோ அல்லது பிறந்த தேதி கூட்டு எண்ணோ 8 அல்லது 3 ஆகிய எண்களிலேயே இருந்துள்ளது. Ret Rev பால்ராஜ் பிறந்த தேதி கூட்டு எண் 8, Ret Rev ஜேம் சீனிவாசன் பிறந்த தேதி (30=3), Ret Rev G. பால்வசந்தகுமார் பிறந்ததேதி (1+2=3) Ret Rev சந்திரசேகர் பிறந்த தேதி கூட்டு எண் 8, பெயரின் கூட்டு எண் 8.

CSI தேவாலயத்தின் முன்னாள் பேராயர் Rev பால்வசந்தகுமாரை, அவர் பதவியேற்றும் முன்னதே சந்திக்க நேர்ந்தது. அப்போது, அவருடைய பிறந்த தேதியை கேட்டு நடைபெறவிருக்கும் பேராயர் தேர்தலில் நீங்கள் வெற்றிபெருவீர்கள் என்று கூறீனேன். ஆனால், அப்போது அவர் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என கூறிவிட்டார். G.PAUL VASANTHA KUMAR (3+8+1+6+3+6+1+3+1+5+4+5+1+2+6+4+1+2=62=6+2=8), பிறந்த தேதி 3 (12=1+2=3). ஆனால், நான் சொன்னபடியே, அவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்று பேராயராக பதவியேற்றார். பின்னர், கூட்டு எண்ணில் பதவி ஏற்றால் உச்சபதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்று சொன்னேன். அதேபோல் 65 வயது வரை மட்டுமே இருக்ககூடிய பேராயர் பதவியில் இவர் 67வயது வரை இருந்தார். CSI பேராயராக பதவியேற்றும் அனைவரும் 67 வயது வரை பதவி வகிக்கலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்தார்.

 

மேலும், சில உதாரங்களை
அடுத்த இதழில் பார்ப்போம்…

N3

Leave A Reply

Your email address will not be published.