எப்போதும் ஸ்டாலினுக்கு என் நினைப்புதான்: முதல்வர்

0
1 full

“தூக்கத்தில் கூட ஸ்டாலின் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியை அகற்ற வேண்டுமென முயற்சி செய்கிறார்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் கந்தம்பட்டியில் பிப்ரவரி 2 நடைபெற்ற விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 40 கோடி மதிப்பிலான புதிய சாலை மேம்பாலம் மற்றும் 2 புதிய உயர் மட்டப்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரத்து 49 பயனாளிகளுக்கு 12 கோடியே 25 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சேலத்தை சுற்றியுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது மற்றும் விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றுவது அரசின் கடமை அதற்காகவே அதிக பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் இன்னும் 5 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். அதிமுக அரசின் தொடர்ச்சியான திட்டங்களால் சேலம் அமெரிக்கா போல மாறி வருகிறது” என்று தெரிவித்தார்.

2 full

தொடர்ந்து பேசிய முதல்வர், “நகரத்தில் பிறந்த ஸ்டாலினுக்கு கிராமங்களை பற்றி இப்பொழுது தான் தெரிகின்றது. கிராமங்கள் தான் கோயில் என ஸ்டாலினின் புதுக் கண்டுபிடிப்புக்கு கின்னஸ் சாதனை விருது தரலாம். ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் அரசைப் பற்றி தவறான தகவல்களை புள்ளிவிவரங்கள் தெரியாமல் பேசிவருகிறார். எப்போது பார்த்தாலும் அவருக்கு என்னைப் பற்றிய சிந்தனைதான். தூக்கத்தில் கூட என்னை நினைத்துக் கொண்டுதான் தூங்குவார் என நினைக்கிறேன். இந்த ஆட்சி கவிழும் என சூழ்ச்சி தில்லுமுல்லு செய்து போராட்டங்களை தூண்டி வருகிறார். அத்தனை சூழ்ச்சிகளும் மக்களின் துணையுடன் முறியடித்து வருகிறோம் ” என்று விமர்சித்தார்.

“எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத வகையில் பொங்கல் பரிசாக தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது அதனைத் தடுத்து நிறுத்த தன்னுடைய வழக்கறிஞர் மூலம் ஸ்டாலின் நீதிமன்றத்தில் தடையாணை பெற முயற்சித்தார். ஆனால் நீதி வென்றதால் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்ட முதல்வர், அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் குறுக்கு வழியில் சென்று திமுக தலைவர் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.