இரண்டு சீட் நிச்சயம்: வைகோ

0
1

அண்ணா நினைவு நாள் அமைதிப் பேரணிக்காக மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் சென்னை வரச் சொல்லி ஆணையிட்டிருந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதை ஒட்டி பிப்ரவரி 3 காலை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை இடம், காங்கிரஸ் தலைவர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதுபற்றி மதிமுக வட்டாரங்களில் பேசிய போது…
“மூன்று மாவட்டச் செயலாளர்கள்தான் கூட்டத்தில் பேசினார்கள். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்றிவிட்டதால் காங்கிரஸுக்கு திமுகவிடம் அதிக சீட்டுகள் கேட்பதில் சிரமம் இருக்கக் கூடும் என்றும் அதன் காரணமாக மதிமுகவுக்கு கூடுதல் சீட்டுகள் கிடைக்குமா என்றும் வைகோவிடம் கேட்கப்பட்டது.

4

இறுதியாக பேசிய வைகோ, ‘திமுக கூட்டணியில் நமக்கு ஒரு சீட்டுதான் என்று பத்திரிகைகள் எழுதுகிறார்கள். நல்ல வேளை அரை சீட்டுதான் என்று எழுதவில்லை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த செய்திகளை நம்ப வேண்டாம். திமுகவில் யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஸ்டாலின் என்னோடு சுமூகமாக இருக்கிறார்.
கட்சிக்கான அங்கீகாரம் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்துப் பார்த்தால் நாம் இரண்டு சீட்டுகளாவது ஜெயிக்க வேண்டும். அதற்காகத்தான் நான் திமுகவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

2

எத்தனை கேட்கிறோம் என்பதல்ல முக்கியம், எத்தனை கிடைக்கும் என்று பார்த்தால் இரண்டு சீட் நமக்கு நிச்சயம்’என்று கூறியிருக்கிறார் வைகோ.
அதில் ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள்” என்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.