யார் உண்மையான ஆண்! சரத்குமார் மகள்

0

எல்லா ஆணும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அடுத்தவர் குழந்தையையும் தன் குழந்தையைப் போலவே பாசம் காட்டி வளர்க்க உண்மையான ஆணால் மட்டுமே முடியும். அவர்தான் எனது தந்தை.

ஒரு திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேற நிறையவே சுயமரியாதையும், துணிச்சலும் தேவைப்படுகிறது. அதுவும் கைக்குழந்தையுடன் அத்தகைய பந்தத்தை முறித்துச் செல்வது என்பது எளிதானதல்ல. அதற்கு தன்னம்பிக்கை அதீதமாகத் தேவைப்படுகிறது. அத்துடன் மனத்திடமும் தேவைப்படுகிறது.

அதேபோல் எல்லா ஆணும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அடுத்தவர் குழந்தையையும் தன் குழந்தையைப் போலவே பாசம் காட்டி வளர்க்க உண்மையான ஆணால் மட்டுமே முடியும். அவர்தான் எனது தந்தை.

food

பந்தம் என்பது யாருடைய டிஎன்ஏ, யாருடன் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதல்ல அது முற்றிலும் அன்பால் நிறைந்தது. உறவுக்குத் தரும் உத்திரவாதத்தால் நிறைந்தது. எல்லாமே தவறாகும்போது நான் இருக்கிறேன் என்று துணை நிற்றலில் இருக்கிறது.

குடும்பம் என்பது எப்போதும் ரத்தம் சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களை தனது சொந்தமாக ஏற்றுக்கொண்டு உங்களது மகிழ்ச்சியை உறுதி செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்து என்ன நடந்தாலும் உங்கள் மீது அன்பை செலுத்தும் உறவுகள் நிறைந்ததே குடும்பம். நாங்கள் அப்படிப்பட்ட உணர்வால் ஒன்றிணைந்த குடும்பம். நாங்கள் மகிழ்ச்சியாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.

அண்மையில் நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரின் குடும்ப புகைப்படம் தொடர்பாக வெளியான ட்ரோல்களுக்கு அவரது மகள் ரயான் உருக்கமான பதில்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.