திருச்சியின் ரவுண்டு கட்டும்  ரவுடி அரசியல்வாதிகள் !

0
D1

திருச்சியின் ரவுண்டு கட்டும்  ரவுடி அரசியல் !

 

மோடிக்கு பேனர் வைத்த தாதா பசு!

 

திருச்சியில் தாதாக்களை அரசியல் பின்புலத்தோடு போலீஸார் நடத்திய என்கவுன்டரில் கோசிஜின், பிச்சமுத்து, ‘முட்டை ரவி, ஸ்பீடு பாலாஜி, மணல்மேடு சங்கர் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டனர் அவர்கள் அனைவருமே அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக வலம்வந்தவர்கள். அதன்பின், திருச்சி அமைதி பூமியாக இருந்தது. திருச்சியின் அடுத்த தலைமுறை வஸ்தாதுகளாக உருவெடுத்த மண்ணச்சநல்லூர் குணா, சாமி ரவி, பட்டறை சுரேஷ், விக்டர், சேட்டு உள்ளிட்டோர் முழுநேர அரசியல்வாதிகளாகவே மாறிவிட்டனர்.

D2

 

திருச்சி பொன்மலை, கீழக்குறிச்சியைச் சேர்ந்த ‘தாதா’வான மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷை, ‘பசு’ என்றே அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கிறார்கள். இவர்மீது கொலை, ஆள்கடத்தல் என திருச்சி, தஞ்சை, அரியலூர், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காரை மோதிக் கொலைசெய்துவிட்டு, உடலைத் தண்டவாளத்தில் வீசிவிடுவார். கொல்லப்பட்டவரின் உடல், ரயிலில் அடிபட்டு சின்னாபின்னமாகச் சிதைந்துவிடும். இப்படி, போலீஸ் உள்பட அனைவரின் கவனத்தையும் திசைதிருப்புவதே இவரது ஸ்டைல். ஜூலை 7-ம் தேதி இவருக்குப் பிறந்தநாள். அன்றைய தினம், திருச்சி முழுக்க போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்துவது இவரது வழக்கம்.

 

சில வருடங்களுக்கு முன்பு சிறையில் இருந்தபோது, பிறந்த தினத்தன்று அரசியல் தலைவர்கள் பலர் போனில் வாழ்த்தினார்களாம். திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பேனர்கள் வைத்து அசத்தினார் பசு. தற்போது பாரிவேந்தர் கட்சியில் அவருக்கு பாதுகவலராகவும், இளைஞர் அணி பொறுப்பாளராகவும் வலம் வருகிறார். 

அஜித் தல குணா  – இலங்கை குணா – மண்ணச்சநல்லூர் குணா ஆனது ! .

 

N2

திருச்சியைக் கலக்கிய முட்டை ரவிக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் சாமி ரவி, மண்ணச்சநல்லூர் குணா, சுந்தரபாண்டியன். இலங்கையைச் சேர்ந்தவரான குணா, இப்போது ‘மண்ணச்சநல்லூர் குணா’ என மாறியிருக்கிறார். முட்டை ரவியின் மரணத்துக்குப்பின், அந்த டீமுக்குத் தலைவரானார். அடுத்தடுத்த நெருக்கடிகளால், மலைவாழ் மக்களுக்கான இயக்கம் உருவாக்கினார்.

 

இப்போது, அ.தி.மு.க-வில் அதிகாரம் நிறைந்த தலைமையின் குடும்பத்துடன் மிக நெருக்கத்தில் இருக்கிறார். பலமுறை குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தாலும், அடுத்த சில வாரங்களில் அதை உடைத்து வெளியே வந்துவிடுவார். அதனால், இவர்மீது கடுப்பில் இருந்த போலீஸ், சில வருடங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் குணா சிக்கியபோது, இடுப்பை உடைத்துச் சிறைக்குள் அடைத்தது. சிறையில் இருந்தவாறே ஸ்கெட்ச் போட்டு சில ஆபரேஷன்களை நடத்தி முடிக்கிறாராம். நான் திருந்தி எந்த பிரச்சனையும் செய்ய வில்லை என்று அடிக்கடி அபாயக்குரல் கொடுத்தாலும் திருச்சி தொடர்ந்து குணா சிறை செல்வதும் ஜாமீன் எடுப்பதும் வழக்கமான வேலையாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

 

தொழில் அதிபர் போர்வையில் டிமிக்கி கொடுக்கும் சாமி ரவி –

 

திருச்சியைத் திக்குமுக்காட வைத்த முட்டை ரவியின் கூட்டாளிகளில் முக்கியமானவர் சாமி ரவி. ஸ்கெட்ச் போட்டு ஆளைத் தூக்குவதில் எக்ஸ்பர்ட் என்கிறார்கள். முட்டை ரவி இருந்தவரை நண்பர்களாக இருந்த குணாவும் சாமி ரவியும், அவருடைய மறைவுக்குப் பின்னர் எதிரிகளாக மாறினார்கள்.

 

வாண்டையார் குரூப்பில் தன்னுடைய இன்னீங்ஸ்சை ஆரம்பித்த சாமி ரவி, பெரிய டீல்களை முடித்தார். அரசியல்வாதியாகிவிட நினைத்து, ‘அகில இந்திய முக்குலத்தோர் பாசறை’யில் இணைந்து மாநில நிர்வாகி ஆனார். இதன்மூலமாக, அதிகார மையத்துக்கு நெருக்கமான குடும்பத்துடன்  ஒன்றிப்போனார். முக்கியமான சில கொலை வழக்குகளில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கும் திருச்சி காவல்துறை, பல மாதங்களாக இவரை வலைவீசித் தேடி வருகிறது. 

 

என்கவுன்டர் பயத்தில் சுந்தரபாண்டியன்

 

முட்டை ரவி, மண்ணச்சநல்லூர் குணா ஆகியோருடன் இருந்தவர், சுந்தரபாண்டியன். ராமஜெயம் பாணியில் கொல்லப்பட்ட ‘புல்லட்’ மனோகர் கொலை வழக்கில் இவருக்கும் தொடர்பு இருந்தது. ராமஜெயம் கொலை வழக்கில் இவர்மீதும் போலீஸின் சந்தேகப் பார்வை விழுந்தது. கொலை, கொலை முயற்சி உள்பட 18 வழக்குகள் இவர்மீது உள்ளன. நான்கு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். துப்பாக்கியைக் காட்டி போலீஸாரை மிரட்டிய வழக்கில் கைதாகி, சிறையில் உள்ளார்.

 

கொலை, கொள்ளைச் சம்பவங்களை முடித்த பிறகு, கல்லூரி மாணவர்களுடன் ஹாஸ்டலில் தங்குவது இவரது ஸ்டைல். இவரை என்கவுன்டரில்  போட்டுத்தள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர் என்று அலறுகிறார், சுந்தரபாண்டியனின் மனைவி காயத்ரி .

 

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.