ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலும் தெப்பத் திருநாள் விழாவும் !

0

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தெப்பத் திருநாள் விழா !

 

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முதல் 16 வரையில் ஸ்ரீநம் பெருமாள் திருப்பள்ளி ஓடம்(தெப்பத் திருநாள் விழா) உற்சவம் நடைபெற உள்ளது.

 

பாண்டியர்கள் காலத்தில் தெப்பத்திருநாளானது எம்மண்டலங்கொண்டு கோயில் பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர் கைங்கர்யமாக அவர் பெயரிலே நடைபெற்ற திருநாளான சித்திரைத் திருநாளுக்குத் திருக்காவிரி நீர்பாய்ச்சி அதிலே முத்தும், பவளமும் கட்டின திருக்காவணமும் கட்டுவித்து ஊருனியிலே திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணி நிறுத்தி அதிலே நாச்சிமார்களுடனே அழகிய மணவாளனை எழுந்தருளச் செய்து தெப்போத்ஸவம் நடைபெற்றது.

இவ்வாறு நடைபெற்ற இந்த விழாவானது பிற்காலத்தில் ஆடிப்பதினெட்டாம் நாள் அன்று திருக்காவிரியில் திருப்பள்ளி ஓட உத்ஸவமாக நடைபெற்று வந்தது. அவ்வாறு ஒரு ஆண்டு நம்பெருமாள் உபய நாச்சிமார்களோடு திருப்பள்ளி ஓடத்திலே எழுந்தருளித் தெப்பத் திருநாள் கண்டருளுகையில் துர்மந்த்ரங்களை ப்ரயோகித்தவர்களுடைய(மாந்த்ரீகர்களுடைய) அடாத செயலால் தெப்பமானது திருக்காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட, அச்செய்தியைக்கேட்டு, கூரநாயராயண ஜீயரும் தம்முடைய வலது திருக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்ப நம்பெருமாள் திருப்பள்ளி ஓடமும் காவிரி வெள்ளப்பெருக்கினை எதிர்த்து நிலைகொண்டிற்று. நாச்சிமார்களும் அழகிய மணவாளனும் எவ்வித ஆபத்துமின்றி ஆஸ்தானம் சென்றடைந்தார்கள்.

 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கூரநாராயணஜீயர் மந்திரவாதிகளுடைய அக்கிரமச் செயல்களுக்கு இடம் கொடாதபடி கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டுவித்து அதிலே திருப்பள்ளி ஓடத் திருநாள் நடத்தும்படி பண்ணுவித்தார். அந்தச் செயலைப்போற்றும் வண்ணம் தெப்பத் திருநாளில் விட்டவன் விழுக்காடு(ஸ்ரீநம்பெருமாளுக்கு அமுது செய்த பிரசாதம்)இன்றும் ஸ்ரீரங்கநாராயணஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

 

அதன்பிறகு, கந்தாடை ராமானுஜமுனி காலத்தில்(கி.பி.1489) அடைய வளைந்தானுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டி வைத்தார்.

 

தற்போது நடைபெறும் மாசித் திருநாள், துளுவ வம்சத்தைச் சார்ந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னரான கிருஷ்ணதேவராயர்(கி.பி. 1509 – 1529)பெயரில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட ப்ரம்மோத்ஸவத்தின் திரிபு ஆகும். மாசித் திங்கள் நடைபெறும் திருநாளைக் கிருஷ்ணதேவ மகாராயர் திருநாள் என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றன. ஆயினும் இன்று மாசித் திங்களில் நடைபெறும் விழா அவர் பெயரால் குறிக்கப்படுவதில்லை. இத்திருநாள் தெப்பத்திருநாளாக ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இத்திருவிழா மாசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை கடைசி நாளாகக் கொண்டு ஸ்ரீநம்பெருமாள் தெப்பத் திருநாள் 9 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

முதல் திருநாள் தை மாதம் 25ம் தேதி(பிப்ரவரி 8) வெள்ளிக்கிழமை

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பாடு       காலை 8.00 மணி

ரெங்கவிலாச ஆஸ்தான மண்டபம் சேருதல்                                                           காலை 8.30 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பாடு                                                                       மாலை 5.00 மணி

வாகன மண்டபம் சேருதல்                                                                                             மாலை 5.15 மணி

ஹம்ச வாகனத்தில் புறப்பாடு                                                                                        மாலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வாகன மண்டபம் சேருதல்                                               இரவு 7.45 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு                                                                             இரவு 8.30 மணி

மூலஸ்தானம் சேருதல்                                                                                                      இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 8.15 – மாலை 5.30 மணி

பூஜா காலம்       மாலை 5.30 – மாலை 6.45 மணி

சேவை நேரம்     மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.

2ம் திருநாள் தை மாதம் 26ம் தேதி(பிப்ரவரி 9) சனிக்கிழமை

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு           காலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து ரெங்கவிலாச ஆஸ்தான மண்டபம் சேருதல்    காலை 7.30 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடு           மாலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வாகன மண்டபம் சேருதல்                                           இரவு 7.45 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு                                                              இரவு 8.30 மணி

மூலஸ்தானம் சேருதல்                                                                            இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 6.45 – மாலை 5.30 மணி

பூஜா காலம்       மாலை 5.45 – மாலை 6.45 மணி

சேவை நேரம்     மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.

3ம் திருநாள் தை மாதம் 27ம் தேதி(பிப்ரவரி 10) ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு           காலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி டிரான்ஸ்லேட்டர் ராமராவ் மண்டபம் சேருதல்                                                    பகல் 12.00 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து கற்பகவிருட்சத்தில் புறப்பாடு               மாலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வாகன மண்டபம் சேருதல்                                           இரவு 8.30 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு                                                              இரவு 8.45 மணி

மூலஸ்தானம் சேருதல்                                                                            இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 6.45 – மாலை 5.30 மணி

பூஜா காலம்       மாலை 5.45 – மாலை 6.45 மணி

சேவை நேரம்     மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.  

4ம் திருநாள் தை மாதம் 28ம் தேதி(பிப்ரவரி 11) திங்கள்கிழமை

 வெள்ளி கருடசேவை

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு           காலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபம் சேருதல்                                                    பகல் 1.00 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு      மாலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வாகன மண்டபம் சேருதல்                                           இரவு 8.30 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு                                                              இரவு 9.00 மணி

மூலஸ்தானம் சேருதல்                                                                            இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 6.45 – மாலை 5.30 மணி

பூஜா காலம்       மாலை 5.45 – மாலை 6.45 மணி

சேவை நேரம்     மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.  

5ம் திருநாள் தை மாதம் 29ம் தேதி(பிப்ரவரி 12) செவ்வாய்க்கிழமை

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு           காலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி ரெங்கவிலாச ஆஸ்தான மண்டபம் சேருதல்                                                              காலை 8.30 மணி

food

மேற்படி மண்டபத்திலிருந்து இரட்டை பிரபையில் புறப்பாடு              மாலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வாகன மண்டபம் சேருதல்                                           இரவு 7.45 மணி

வாகன மண்டபத்திலிருந்து புறப்பாடு                                                              இரவு 8.45 மணி

மூலஸ்தானம் சேருதல்                                                                            இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 6.45 – மாலை 5.30 மணி

பூஜா காலம்       மாலை 5.45 – மாலை 6.45 மணி

சேவை நேரம்     மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.

6ம் திருநாள் மாசி மாதம் 01ம் தேதி(பிப்ரவரி 13) புதன்கிழமை

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு           காலை 6.30 மணி

உள்திருவீதி வலம்வந்து வானிய மண்டபம் சேருதல்                    காலை 10.00 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து தோளுக்கினியாளில் புறப்பாடு              மாலை 5.00 மணி

யானை வாகன மண்டபம் சேருதல்                                     மாலை 5.45 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து யானை வாகனத்தில் புறப்பாடு              இரவு 8.00 மணி

உள்திருவீதி வலம்வந்து யானை வாகன மண்டபம் சேருதல்                        இரவு 9.00 மணி

உள் ஆண்டாள் ஸந்நிதியில் மாலை மாற்றிக்கொண்டு மூலஸ்தானம் சேருதல்                                                                                                                             இரவு 10.00 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 6.45 – மாலை 5.30 மணி

பூஜா காலம்       மாலை 5.45 – மாலை 6.45 மணி

சேவை நேரம்     மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.  

7ம் திருநாள் மாசி மாதம் 02ம் தேதி(பிப்ரவரி 14) வியாழக்கிழமை

ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பாடு                                               மாலை 6.30 மணி

நெல்லளவு கண்டருளி உள்திருவீதி வலம் வந்து மூலஸ்தானம் சேருதல் இரவு 9.00 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 6.30 – பகல் 12.00 மணி

பூஜா காலம்       பகல் 12.00 – பகல் 1.30 மணி

சேவை நேரம்     பகல் 1.30 – மாலை 4.00 மணி

பூஜா காலம்(புறப்பாடு) மாலை 4.00 – மாலை 6.45 மணி

சேவை நேரம்         மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.  

 

8ம் திருநாள் மாசி மாதம் 03ம் தேதி(பிப்ரவரி 15) வெள்ளிக்கிழமை

தெப்பம்

ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடு       மாலை 3.00 மணி

தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருதல்                             மாலை 5.00 மணி

ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பாடு                                 இரவு 7.15  மணி

தெப்பம் கண்டருளல்                                                  இரவு 7.00 – 9.00 மணி

மைய மண்டபம் சேருதல்                                              இரவு 9.15 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பாடு                                                 இரவு 9.45 மணி      மூலஸ்தானம் சேருதல்                                                  இரவு 11.15 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 6.45 – பகல் 11.30 மணி

பூஜா காலம்(புறப்பாடு) பகல் 11.30 – மாலை 3.15 மணி

சேவை நேரம்     மாலை 3.15 – மாலை 5.45 மணி

பூஜா காலம்        மாலை 5.45 – மாலை 6.45 மணி

சேவை நேரம்       மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.  

9ம் திருநாள் மாசி மாதம் 04ம் தேதி(பிப்ரவரி 16) சனிக்கிழமை

பந்தக்காட்சி

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடு           காலை 7.30 மணி

வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருதல்                                         பகல் 1.30 மணி

திருமஞ்சனம் கண்டருளல்                                        பகல் 2.00 – 4.00 மணி

மேற்படி மண்டபத்திலிருந்து யானை வாகனத்தில் புறப்பாடு              இரவு 7.00 மணி

சித்திரை வீதிகள் வலம்வந்து படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சேருதல்   இரவு 9.30 மணி

மூலஸ்தான சேவை

சேவை நேரம்     காலை 7.45 – மாலை 5.30 மணி

பூஜா காலம்       மாலை 5.45 – மாலை 6.45 மணி

சேவை நேரம்     மாலை 6.45 – இரவு 8.30 மணி

இரவு 8.30 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.  

குறிப்பு

பொதுஜன சேவை நேரங்களில் பொதுவழியில கட்டணமின்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.

மேற்படி நேரங்களில் விரைவு தரிசன வழியில் சென்று சேவிக்க நபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ.250, சிறப்பு தரிசன வழியில் சென்று சேவிக்க நபர் ஒன்றுக்குகட்டணம் ரூ.50.

பூஜா காலங்களில் மூலஸ்தான சேவை கிடையாது.

பிப்ரவரி 8 முதல் 16ம் தேதி வரையில் விஸ்வருப சேவை கிடையாது.

 

 

 

 

 

 

 

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.