புதுமையான மற்றும் தற்கால பிரச்சனைகளுக்கேற்ற தீர்வுகளை எடுப்பதற்கான வழிமுறை

0
gif 1

பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் பல்கலை கழக மானியக் குழு இணைந்து நடத்தும் தேசிய அளவிலான கருத்தரங்கம் “தற்காலத்திய பிரச்சனைகளுக்கேற்ற மாற்றுருவாக்கம் கொண்ட சமூகப்பணிக் கல்வி மற்றும் செய்முறைகளை உருவாக்குவது” என்ற தலைப்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமானது சமூகப்பணித்துறை மாணவர்கள் புதுமையான மற்றும் தற்கால பிரச்சனைகளுக்கேற்ற தீர்வுகளை எடுப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொண்டு அதற்கேற்றப்படி சமூகப்பணிக் கல்வி மற்றும் செய்முறைகளை மாற்றி அமைப்பதாகும்.

இம்மாநாடு காலை 9.30 மணிக்கு இறைவாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம், லயோலா கல்லூரியின் சமூகப்பணித்துறை தலைவர் மற்றும் இணைப்பேராசியர் முனைவர். சோனி ஜோஸ்> கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தேசிய கருத்தரங்கின் சுருக்கத்தொகுப்பு புத்தகத்தை சிறப்பு விருந்தினர் முனைவர்.சோனி ஜோஸ் வெளியீட்டார்.

gif 4

முதல் பிரதியை பாரதிதாசன் பல்கலைகழகத்தின் கலை மற்றும் அறிவியல் துறை புல முதன்மையரும் பேராசிரியரராசிரியருமான முனைவர். இளங்கோ பெற்றுக்கொண்டார். இதனையடுத்து பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர். பால் தயாபரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.

gif 3

அதில் அவர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 128 சுருக்கத்தொகுப்பையும் 87 கட்டுரைகளையும் பாராட்டினார். சிறப்பு விருந்தினர் தற்காலத்தில் மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சி செய்வதை செயல்முறைப்படுத்துவதுவதற்காகவும் இந்தக் கருத்தரங்கம் சமூகப் பணியாளர்களுக்கு அடிப்படையாக அமையும்.

மேலும் சமூகப்பணியாளர்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு தொழில் பண்பட்டவர்களாக இன்றைய சமுதாயத்தில் மேலோங்கி நிற்கின்றனர். சமூகப்பணியாளர்கள் களப்பயிற்சியில் ஈடுபடுவதின் மூலம் அவர்களின் திறமைகள் மேம்படுகிறது என கூறினார். மேலும் முனைவர். பி. இளங்கோ, முனைவர். பால்தயாபாரன், முனைவர்.ரெல்டன், முனைவர்.உமேஷ், சாமுவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்

gif 2

Leave A Reply

Your email address will not be published.