அற்புதங்கள் செய்யும் குழந்தை இயேசு

0
1

குழந்தை இயேசு பக்தியின் வரலாறு

பிரேகு நகரக் குழந்தை இயேசுவின் பக்தி இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பா நாடெங்கும் பரவியிருந்தது. ஆரம்ப காலத்தில் குழந்தை இயேசுவின் திரு உருவம் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்ததென வரலாறு கூறுகிறது. அரும் பெரும் பரம்பரைச் செல்வமாக தன் குடும்பத்தில் வைத்துப் பேணி பாதுகாத்து வந்த இத்திரு சுரூபத்தை மரிய மன்ரிக்கேஸ்தெலாரா என்னும் ஸ்பானிய இளவரசி போலிக்சேனா லோகோவிட்ஸ் என்ற தன் மகளுக்குத் திருமணப் பரிசாக அளித்தாள். திருமணத்திற்குப் பின் பொகிமியாவிலுள்ள தன் கணவனின் இல்லம் செல்லுகையில் சுரூபத்தை தன்னுடன் எடுத்துச் சென்றாள். கி.பி.1623ம் ஆண்டில் தன் கணவனை இழந்த பின் எஞ்சிய தன் வாழ்நாட்களை பக்திப் பணியிலும், பிறரன்புச் சேவையிலும் கழிக்க உறுதி ஏற்று இளவரசி போலிக்சேனா, பிரேகு நகர கார்மேல் சபைத் துறவியருக்கு இந்த புதுமைச் சுரூபத்தை கொடுத்தாள்.

2

கொடுக்கும்போது அவள் கூறிய இறைவாக்கு இது. “உலகிலேயே மிக மிக உயர்வாக நான் மதித்து போற்றும் தன்னிகரில்லாத் தனிப்பெரும் செல்வமான இத்திருச் சுரூபத்தை உங்களுக்கு கொடுக்கிறேன். குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள். குறை என்பதே இனி உங்களுக்கு இருக்காது.”

நன்றியுடன் இத்திருச் சுரூபத்தை பெற்றுக் கொண்ட துறவியர் தங்கள்குரு மாணவரின் ஆசிரமத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அவளுடைய வாக்கு முற்றிலும் அப்படியே நிறைவேறியது. அம் மடத்தை இறைவன் ஆசீர்தித்தார். அச்சபையும் ஆன்ம சரீர நலன்களால் நல்ல முன்னேற்றம் கண்டது. உள்ளத்தையும் உடலையும் தொல்லைகள் பல தாக்கிய போதெல்லாம், இத்திருச் சுரூபம் இருந்த சிறு கோவிலே அத்துறவியர்க்கெல்லாம் அடைக்கலமும், ஆறுதலும் அளித்து வந்தது. அவர்களுள் பெரும் பக்தராக இருந்தவர் தவத்திரு தந்தை சிரில்ஸ். கி.பி.1630ம் ஆண்டில் முப்பது ஆண்டு கடும் போரின் காரணமாக, தூய கார்மேல் சபையின் குருமாணவரின் ஆசிரமம் மியூனிக் நகருக்கு மாற்றலாகியது. போர் முடிந்து ஊரை விட்டுப் பகைவர்கள் வெளியேறிய பின் தந்தை சிரில்ஸ் பிரேகு நகரில் ஆரம்பத்தில் வழிபட்டு வந்த அதே சிறு கோவிலிலேயே குழந்தை இயேசுவின் திருச் சுரூபத்தை நிறுவ உதவி செய்தார். அச்சமயம் இததிருச் சுரூபம் உருசிதைந்து இருந்ததைக் கண்டு கண்ணீர் வடித்தார்.

சிதைந்த அச்சுரூபத்தின் முன் மெய்மறந்து மன்றாடியபோது குரலொன்று அதிசயத் தெளிவாக அவருக்கு கூறிய சொற்கள் இவை. “என் மேல் இரக்கமாயிரு, நானும் உன் மீது இரக்கம் கொள்வேன். உன் கைகளை எனக்குக் கொடு,, உனக்கு நான் அமைதி அருள்வேன்.”

அற்புத குழந்தையேசு செய்த அற்புதம்

வியாதியிலிருந்து விடுதலை

போலீஸ் காலனி M-40 ல் வசிக்கும் மரியசூசையின் சாட்சி:

2002 மார்ச் மாதம் என்னுடைய உடம்பில் தண்டுவடம் எலும்பு தேய்ந்து நரம்புவலி வேதனையால் மிகவும் கஷ்டப்பட்டேன். உடனே டாக்டரிடம் காண்பித்தேன். அதற்கு டாக்டர் மருந்து கொடுத்தார். சாப்பிட்டும் குணமாகவில்லை. இதற்கு அப்பலோ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். அதற்கு இரண்டு லட்சம் செலவு ஆகும் என்று கூறினார்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்தாலும் பூரண சுகம் கிடைக்காது என்று கூறினார்கள். வேதனை தாங்க முடியாமல் இராணுவத்திலிருந்து (V.R.S.) வாங்கி வந்து விட்டேன். குடும்பமாய் சேர்ந்து கண்ணீரோடு ஜெபித்தோம்.

தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்ற வசனத்திற்கு ஏற்ப எங்கள் ஜெபம் கேட்கப்பட்டது. அற்புதமாக சுகம் கொடுத்தார். திரும்ப வேலையும் கிடைக்கச் செய்தார். நாள் முழுவதும் வேலை செய்ய பெலனும் பூரண சுகத்தை கொடுத்தார். ஜெபமே ஜெயம்.அற்புதமாய் சுகம் கொடுத்த அற்புத குழந்தையேசுவுக்கு

நன்றி.

S.மரியசூசை M.I.G-40, போலீஸ் காலனி, திருச்சி-26


தந்தை சிரில்ஸ் அக்குரலை ஒரு கட்டளையாக ஏற்று செய்பட முனைந்தார். கடும் நோயாளி ஒருவர் சிதைந்திருந்த சிலையை சரி செய்ய அதிக நன்கொடை ஒன்றை அளித்தார். ஆனால் துறவியாரோ தான்கேட்ட அந்த அதிசயக் குரலின் திட்டவட்டமான கட்டளைக்கு மாறாக புத்தம் புதிய வேறொரு சுரூபத்தை வாங்கி கோயிலில் வைத்தார். திடீரென்று விளக்குத்தண்டு ஒன்று அச்சுரூபத்தின் மேல் விழ, அச் சுரூபம் சுக்கு நூறாக உடைந்ததுமில்லாமல், துறவியாரும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு பதவியிலிருந்து விலகிக் கொண்டார். பழைய தன் திருச்சுரூபத்தை அலட்சியமாக ஒதுக்கி விட்டது குழந்தை இயேசுவுக்குப் பிடிக்கவில்லையென்பது இதனால் புலனாயிற்று.

தந்தை சிரில்ஸ்க்குப்பின் பதவியேற்ற துறவியார் தான் பெற்ற இன்னொரு நன்கொடையைப் பயன்படுததி பழைய திருச்சுரூபத்தை சரி செய்தார். அதைக்கண்ட குழந்தை இயேசுவும் தம் மகிழ்சிசயை ஓர் புதுமையின் வழியாக வெளிப்படுத்தினார். அச்சமயம் அந்நகரையே விழுங்கி வந்த பயங்கரத் தொற்றுநோய் துறவியாரையும் தாக்கியது. நோய் நீங்கி மீண்டும் நலம் பெற்று எழுந்தால், அத்திருச்சுரூபத்தின் முன் ஒன்பது நாட்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுப்பதாக அவர் நேர்ந்து கொண்டார். அதன்படியே, அற்புதமாக அவர் குணமடைந்தார். அவரும் தன் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். அத்துடன் குழந்தை இயேசுவின் பக்தி வழியாக பொதுமக்களும் பயன்பெற வேண்டுமென தம் மடத்தை ஒட்டியிருந்த கோயிலில் சிறப்பு மிக்கதொரு தனி இடத்தை அலங்கரித்து. அங்கே திருச் சுரூபத்தை நிறுவினார். அதன்பின் வரங்களும் அருட்கொடைகளும் வழிந்தோடின. புதுமைகள் பூத்துக் குலுங்கின. பிரேகு நகரெங்கும் இத்திருச் சுரூபத்தின் புகழ் பரவியது. குழந்தை இயேசுவின் பக்தியும் வளர்ந்து கொண்டே வந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள் தம் பக்தர்களுக்கு அவர் அருளி வரும் அற்புதங்களின் காரணமாக குழந்தை இயேசுவின் பக்தி பாரெங்கும் இன்றும் பரவி நிற்கின்றது. நம் போலீஸ் காலனி அற்புத குழந்தை. இயேசுவின் திருத்தலத்திலும் கூட.

 

அற்புத குழந்தையேசு எனக்கு இரண்டாவது முறையாக அற்புதம் செய்து

வியாதியிலிருந்து விடுதலை தந்தார்

கடந்த நான்கு ஐந்தாண்டுகளாக எனக்கு உடம்பில் நரம்பு (சூர ஓடுதல்) மூலம் உட்கார முடியாமலும் நடக்க முடியாமலும் அவஸ்தை பட்டு வந்தேன். இத்துடன் இரு பாதங்களில் எரிச்சலாலும் அவஸ்தை பட்டு வந்தேன். இந்த வியாதியிலிருந்து விடுதலை பெற்று மீண்டும் உம் ஆலயத்திற்கு வந்து சாட்சி சொல்லி உமக்கு பொருத்தனை செலுத்துவதாக இடைவிடாமல் குழந்தை யேசுவிடம் வேண்டி வந்தேன். என் ஜெபத்திற்கு பதில் அளித்து இரண்டு வியாதிகளிலிருந்தும் அற்புதமாய் விடுதலை கொடுத்தார்.

எனக்கு மீண்டும் கல்லூரியில் வேலை செய்யும்படி பூரண பலத்தையும், சுகத்தையும் கொடுத்த அற்புத குழந்தை யேசுவுக்கு கோடான கோடி தோஸ்த்திரம் சொல்லி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

“நீ என்னை மகிமை செய்ய செய்ய

நான் உன்னை ஆசீர்வதிப்பேன்”

ஜெபமே ஜெயம்

எனக்கு செய்த அற்புதத்தை உங்களுக்கும் செய்வார் என நான் சாட்சி சொல்கிறேன்.

நன்றி

தேதி: 17.11.2016

S.மரியசூசை

Plot No.209, வெங்கடேஸ்வராநகர் விஸ்தரிப்பு, கொட்டப்பட்டு, திருச்சி-620 004.

திருச்சி மறைமாவட்டம், துப்பாக்கி தொழிலகப் பங்கின் கிளையாக அமைந்துள்ளது போலீஸ் காலனி. இங்கு 12.03.1992ல் குழந்தை இயேசு சிற்றாலயம் கட்டப்பட்டு 03.02.1998ல் விரிவாக்கப்பட்டது. போலீஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் வந்து குழந்தை இயேசுவின் ஆசீர்பெற்றுச் செல்கின்றார்கள்.

4

அற்புதக் குழந்தை இயேசு, தன்னை மகிமைப்படுத்துகின்ற அனைவருக்கும், மன அமைதியும், நோய்களிலிருந்து விடுதலையும், குடும்ப பிரச்சனைகளை நீக்கி சமாதானமும், வேலையில்லாத மக்களுக்கு வேலை வாய்ப்பும், குழந்தை பாக்கியத்தையும், கடன்தொல்லைகள் நீங்கவும், மனத்துயர்கள் நீங்கவும் அளவின்றி ஆசீர் வழங்குகின்றார்.

 

வருகின்ற 09 பிப்ரவரி 2019 சனிக்கிழமை மாபெரும் ஆடம்பர பாடல் திருப்பலி மற்றும் அற்புத தேர்பனி

10 பிப்ரவரி 2019 ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கம்

முகநூலில் நேரலையில் காண www.facebook.com/நம்மதிருச்சி

www.facebook.com/policecolonyinfantjesus

Email us: infantjesuspolicecolony@gmail.com

05/02/2019 கொடியோற்ற சிறப்புத் திருப்பலி மற்றும் கொடியோற்ற நிகழ்வு புகைப்படங்கள்

3

Leave A Reply

Your email address will not be published.