தயவுசெய்து மன்னிப்பு கேட்காதீர் நடிகர் சிவகுமார்

0
Business trichy

 

நடிகரும், தமிழ் அறிஞருமான சிவகுமார் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு திறப்பு விழாவின்போது தன்னை செல்போனில் படம் எடுத்த இளைஞன் ஒருவனின் போனை தட்டிவிட்டார். இதை பெரிய பிரச்சினையாக்கி விவாதித்தனர். இதற்கு அவர் வருத்தம் தெரிவித்ததோடு. அந்த இளைஞனுக்கு விலை உயர்ந்த புதிய செல்போனும் வாங்கிக் கொடுத்தார்.

இந்த விஷயத்தில் எனக்கு சிவகுமார் மீது சின்ன வருத்தம் இருந்தது. ஓரமாக நின்று செல்போனில் படம் எடுத்த இளைஞன் மீது இப்படி கோபத்தை காட்விட்டாரே. கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாமே என்று. ஆனால் அவரது மன்னிப்பும், செல்போன் வாங்கிக் கொடுத்ததும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது.

Kavi furniture

ஆனால் நேற்று நடந்த ஒரு நிகழ்வின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க இயக்குனர், எழுத்தாளர், நடிகர் ஈ.ராமதாஸ் இல்ல விழாவுக்கு சென்ற அவரை ஒரு இளைஞன் வழிமறித்து அவரது பார்வையை மறைக்கும் வகையில் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டு நடக்கிறான். அவர் சிரித்துக் கொண்டே அதனை தட்டி விடுகிறார். செல்போன் கீழே விழுகிறது. “மீண்டும் சிவகுமார் கோபம், திமிர்” என்று நெட்டிசன்கள் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.

MDMK

ஒருவர் அனுமதி இன்றி அவரை புகைப்படம் எடுப்பதோ, வீடியோ எடுப்பதே சட்டப்படி தவறு. சரி கலைஞர்கள் மக்கள் கொடுக்கும் பணத்தில் வாழ்கிறவர்கள், பொதுச் சொத்து, ஒரு ரசிகன் ஆர்வத்துடன் எடுத்தால் என்ன தவறு என்று வைத்துக் கொள்வோம். அதற்கென நேரம் காலம் வேண்டாமா, இடம், பொருள் வேண்டாமா. சிவகுமார் மாதிரியான பக்குவமான கலைஞர்களிடம் உரிமையோடு “உங்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறவர். அவரை அருகில் நின்று பார்க்கிறவன் என்கிற முறையில் நான் இதைச் சொல்கிறேன். இப்படி போகிறபோது வருகிறபோது வழி மறித்து எடுப்பது எந்த விதத்தில் நியாயம்.

சிவகுமார் ஒரு நடிகர் என்பதை விட்டு விடுங்கள். 70 வயதை கடந்த முதியவர். அவர் நடக்கும் பாதையை இப்படி மறித்தால் அவர் இடறி விழ வாய்ப்பிருக்கிறது. அதைத்தான் இவர்கள் விரும்புகிறார்களா? வயதுக்கு ஒரு மரியாதை இல்லையா? ஒரு கலைஞனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போட்டோ எடுக்கலாம் என்கிற பொதுப் புத்தி எப்படி வந்தது. இத்தனைக்கும் அது ஒன்றும் சினிமா கலை நிகழ்ச்சி அல்ல. ஒரு திருமண விழா அங்கு இப்படித்தான் அநாகரீகமாக நடந்து கொள்வதா. செல்பி எடுத்தவனை விட அதை வீடியோ எடுத்து வெளியிட்டவன் அதை விட அயோக்கியன்.

நான் அய்யா சிவகுமாரை கேட்டுக் கொள்வதெல்லாம். தயவு செய்து இதற்கு மன்னிப்பும் கேட்டு விடாதீர்கள், செல்போனும் வாங்கிக் கொடுத்து விடாதீர்கள். “அனுமதி இன்றி செல்போனில் செல்பி எடுத்தால் சிவகுமார் அடிப்பார்” என்கிற செய்தி பரவட்டும். ஒன்றும் தப்பே இல்லை.

இந்த இளைஞர் சமூகம் கலைஞனை மதிக்க கற்றுக் கொள்ளட்டும், முதியவர்களை மதிக்க கற்றுக் கொள்ளட்டும்.

Meeran Mohamed -மூத்த பத்திரிகையாளர் 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.