கல்லூரி மாணவர்களின் இரத்த தான முகாம்

திருச்சி தூய வளனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் இயக்கமும் சேர்ந்து மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் தந்தை அருள் முனைவர் எம். ஆரோக்கியசாமி சேவியர் சே.ச. தலைமையுரையாற்றினார். அதில் மாணவர் கல்வி கற்பதோடு இல்லாமல் சமூக சேவைகளையும் சேர்த்து ஆற்றவேண்டும் என்று குறிப்பிட்டார். வாழ்த்துரையாக கல்லூரியின் செயலர் தந்தை அருள் முனைவர் அ. அந்தோணி பாப்புராஜ் சே.ச. இரத்த தானம் என்பது சமூகத்தில் பல உயிர்களை காக்கும் பணியாக உள்ளது என்று குறிப்பிட்டார் எங்களது கல்லூரியோடு சேர்ந்து திருச்சி லயன்ஸ் கிளப் இயக்கமும் மற்றும் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் இந்த சமுதாயப் பணியை செய்வதை பாராட்டிப் பேசினார்.
இதை தொடர்ந்து திருச்சி மண்டல லயன்ஸ் கிளப் இயக்கத்தின் தலைவர் லயன் ஆர். பிரபு குமார் இந்த முகாமில் கலந்துகொண்டு மாணவர்களிடம் இந்திய திருநாட்டின் முன்னாள் முதல் குடிமகனாக திருமிகு அப்துல் கலாம் ஆற்றிய சமூக சேவைகளை நினைவூட்டி அவரைப் போல இன்று இரத்ததை கொடையாக கொடுக்க வந்திருக்கும் மாணவர்கள் பல சமூக சேவை ஆற்றவேண்டும் என்று குறிப்பிட்டார்.



இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை டாக்டர் சி. புவனேஸ்வரி, லயன் சுவாதி குணசீலன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக வரவேற்புரையை முனைவர் சி. ஆரோக்கிய தன்ராஜ் மற்றும் இறுதியாக நன்றியுரை முனைவர் சுவக்கின் வழங்கினார்.
இந்த நிகழ்வில் 137 மாணவர்கள் தங்களது இரத்தத்தை கொடையாக வழங்கினர். விழா இனிதே முடிவடைந்தது.
