CMC வேலூர், எய்ம்ஸ் டெல்லி போன்ற மிகப் பெரிய மருத்துவமனைகளுக்கு இணையான அறுவை சிகிச்சை விராலிமலை அரசு மருத்துவமனையில்

புதுகோட்டை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா திருவரங்குளம் தேத்தாம்பட்டிசார்ந்த ஏழை கூலி தொழிளாளி ராஜீவ் காந்தியின் மகன் விஜய பாஸ்கர் 10 வயது சிறுவன்.இவனுக்கு பிறக்கும்போதே மல்டி பில்ஆர்த்ரோ கிரிப்போ ஸிஸ் என் கிற அரிய வகை எலும்பு மூட்டுகள் விரைப்பு மற்றும் இறுக்கம் வியாதியினால் அவதிபட்டு வந்ததோடு இவனுக்கு வலது கால் விரல்கள் பிறப்பின் போதே பிரியாமால் அனைத்தும் முழுவதும் ஒன்றோடு ஒன்று ஒட்டி தசையினால் முழுவதும் மூடி முடமாய் காணப்பட்டது.

மேலும் இவனுக்கு இந்தமல்டி பில்ஆர்த்ரோ கிரிப்போ ஸிஸ் இருப்பதினால் முழங்கால் மூட்டுகள் மடக்க முடியமால் தரையில் சம்மணம் மற்றும் குத்து கால் போட்டு உட்கார இயலாமல் , பள்ளி கூட செல்ல முடியாமல்சிரமப்பட்டு வந்தான். இச்சிறுவனை இவன் பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளிலில் அழைத்து சென்றும் சுகம் கிடைக்காத நிலையில் விராலிமலை அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யபடுவதை கேள்வி பட்டு இம்மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த தலைமை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் ஜான் விஸ்வநாத் Uரிசோதித்து பார்த்து விட்டு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தார். இரண்டு கட்டங்களில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யபட்டது.

முதலாவது வலது முழங்காலில் Vy பிளாஸ்டி கேப்சூலெக்டமி என்கிற அறுவை சிகிச்சையும், இரண்டாவதாக வலது கால் விரல்களை பிரிக்கும் முதற்கட்ட அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மரு.ஜான் செய்து முடித்தார். இப்போது வலது முழங்காலைஇயல்பாக முழுவதும் மடக்க முடிகிறது. மற்றும் 5வது 4வது கால் விரல்கள் பிரிக்கப்பட்டு இயல்பான விரல்கள் போல் மாற்றப்பட்டுள்ளது. இவ்வகையான அரிய வகை அறுவை சிகிச்சைகள் CMC வேலூர், எய்ம்ஸ் டெல்லி போன்ற மிகப் பெரிய மருத்துவமனைகளில் தான் செய்யடும் நிலையில் துணை தாலூக மருத்துவமனையாக சர்றேறக்குரிய 1 வருடத்திற்கு முன்பாக தான் மாற்றப்பட்ட விராலிமலை அரசு மருத்துவமனையில் இந்த சவாலான நுணுக்கமான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதை நோயாளிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
