விடைபெற்றது தமிழ் நேசன்

0
Business trichy

விடைபெற்றது தமிழ் நேசன்

உலகில் மிக நீண்ட காலமாக வெளிவரும் தமிழ் நாளேடுகளில் மூத்த நாளேடான தமிழ் நேசன், ஜனவரி 31-ம் தேதியுடன் தன் 94 ஆண்டுப் பயணத்தை முடித்துக் கொண்டது. பிப்.1, 2019 தேதியிட்ட பதிப்புதான் அதன் கடைசிப் பதிப்பு.

காதலிக்க நேரமில்லை திரைப்படப் புகழ் ரவிசந்திரனின் தாத்தா நரசிம்ம ஐயங்காரால் 1924 செப். 24-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டது தமிழ் நேசன். பின்னர் 60 களில் மலேசியாவில் கொடிகட்டிப் பறந்த ஒரு நாட்டுக்கோட்டை செட்டியார் வசம் நிர்வாகம் வந்தது. 1983-ல் அந்த நாளேட்டை டத்தோஸ்ரீ சாமிவேலு குடும்பத்தினர் விலைக்கு வாங்கினர். டத்தோஸ்ரீயின் அரசியல் வாழ்வு சிறப்பாய் இருந்தவரை தமிழ் நேசனும் சிறப்பாகவே நடந்து வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்தது, இரண்டாம் உலகப் போர், மகாத்மா சுடப்பட்டது போன்ற எத்தனையோ நிகழ்வுகளுக்கு காலத்தின் சாட்சியாய் நின்றது தமிழ் நேசன். மலேசிய தேசிய நூலகத்தில் அனைத்து தமிழ் நேசன் இதழ்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

Full Page

கடந்த 10 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வந்த தமிழ் நேசன், தன் பயணத்தை முடித்துக்கொண்டது.

நம் தேசியக் கொடியில் இருக்கும் தர்ம சக்கரம்தான் தமிழ் நேசனின் இலச்சினையாக இருந்தது. ( இடையில் சில காலம் மலேசிய தேசிய மலரான செம்பருத்தியை இலச்சினையாக தமிழ் நேசன் கொண்டிருந்தது. பிறகு மீண்டும் தர்ம சக்கரமே இலச்சினை ஆயிற்று.)

இன்னும் 6 ஆண்டுகள் பயணித்திருந்தால் நூற்றாண்டைத் தொட்டிருக்கும். அந்த பெருமைக்குரிய நாளேட்டில் ஆசிரியர் குழு ஆலோசகராக (Editorial Advisor) நான் பணி புரிந்தது பூர்வ ஜன்ம புண்ணியம் என்றே சொல்ல வேண்டும்.

– கோலாகல ஸ்ரீநிவாஸ்

Half page

Leave A Reply

Your email address will not be published.