தற்கொலைக்கு முன்பு காதலனுடன் பேசிய ஆடியோ உரையாடல்

0

திருச்சி பெண் சிறை வார்டன் மரணத்திற்கு முன்பு காதலுடன் பேசிய ஆடியோ உரையாடல்

திருச்சியில் தற்கொலை செய்த பெண்கள் சிறை வார்டர் செந்தமிழ்செல்வி தனது காதலனுடன் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் வெளியாகி உள்ளது. அதில் செந்தமிழ்செல்வி தனது தந்தை, காதலன் ஆகியோருடன் ‘கான்பரன்ஸ்’ அழைப்பில் பேசியிருக்கிறார். இதில் தங்களது காதல் விவகாரம் தொடர்பாக தந்தை செல்லப்பனிடம் பேசுவதும், அதன்பின் அவர் இணைப்பை துண்டித்துவிடுவதும், செந்தமிழ்செல்வியும், வெற்றிவேலும் பேசுவதும் பதிவாகி

செந்தமிழ்செல்வி:- அப்பா அத பத்தி பேசாதே…

 

தந்தை செல்லப்பன்:- ஏன்ம்மா.. ஒன்னு காதலிக்கற பொண்ண கல்யாணம் பன்னனும். காதலிச்ச பின் ஏமாத்தினால்… அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்.

 

காதலன் வெற்றிவேல்:- நான் ஏமாத்தறன்னு சொல்லவே இல்லையே…

 

அப்போது செந்தமிழ்செல்வி… அப்பா அந்த பொண்ண பத்தி பேசாத…

 

செல்லப்பன்:- நான் அந்த பொண்ண பத்தி பேசல… உன்னை பத்தி தான் பேசுறன். உங்க (வெற்றிவேல்) அம்மா-அப்பாகிட்ட கேட்டா காதலித்தாய்.

 

வெற்றிவேல்:- நான் அந்த பெண்ணை கல்யாணம் செய்வதா சொல்லவே இல்லையே.. நான் பேசவில்லை என்பதற்காக தூக்க மாத்திரை தின்றது.

 

செல்லப்பன்:- அது தூக்க மாத்திரை சாப்பிட்டு ஏதாவது ஆகியிருந்தால் எங்களது நிலைமை என்ன ஆகியிருக்கும். நான் சொல்றது உங்களுக்கு புரியுதா?.. உங்களுக்கு போலீஸ் லைன் பத்தி தெரியும். செந்தமிழ் நீ எதுவும் செய்திராதே. நான் உனக்கு கல்யாணம் ரெடி செய்கிறேன்.

 

ஆவேசம்

 

செந்தமிழ்செல்வி:- நீ என்ன ரெடி பண்ணப்போற… நான் இவனை தான் கல்யாணம் கட்டிக்குவேன்.

 

food

செல்லப்பன்:-என்னம்மா?…நீ… உன் முடிவு எப்படியோ சரி.. நான் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்து அப்படியே இணைப்பை துண்டிக்கிறார். அதன்பின் வெற்றிவேல், செந்தமிழ்செல்வி ஓரிரு நிமிடம் அமைதியாக இருந்த பின் உரையாடல் தொடர்கிறது.

 

செந்தமிழ்செல்வி:- பேசு, சாரி..

 

வெற்றிவேல்:- சாப்பிட்டாயா? இல்லையா? ஏன் சாரி. உங்க அப்பாவாக இருந்ததால் இதோட விட்டுட்டார். இதே வேற யாரும் இருந்தாங்கன்னா வேற மாதிரி பேசியிருப்பார்கள். நான் அந்த பெண்ணை கல்யாணம் செய்ய மாட்டேன் தான் சொன்னேன். நான் ஏதாவது சொல்ல அவர் மனசு எதுவும் கஷ்டப்படக்கூடாது என்பதால் ஒன்னும் சொல்லல. அவர் வேறு பையன் பார்க்கிறதா? சொல்றாரு…

 

செந்தமிழ்செல்வி:- சும்மா..

 

வெற்றிவேல்:- ஏதோ எது செய்தாலும் சரிதான்..

 

செந்தமிழ்செல்வி:- (ஆவேசமாக) என்னா…. என்னை கழட்டி விட்ரலாம்னு பார்க்கிறாயா?…

 

வெற்றிவேல் அதற்கு, உங்கள் வீட்டில் தானே அப்படி சொல்கிறார்கள். உடனே செந்தமிழ்செல்வியும் உங்கள் வீட்டிலும் தானே சொல்கிறார்கள் என்றார்.

 

திருமணம் செய்ய சம்மதம்

 

வெற்றிவேல் உரையாடலில், சீக்கிரம் உன்னை திருமணம் செய்ய பார்க்கிறேன். அதுக்குபிறகு எது நடந்தாலும் சரி தான் என்றும் கூறுகிறார். செந்தமிழ்செல்வி பேசுகையில், நான் எங்கள் வீட்டில் சம்மதம் வாங்கிட்டேன். எங்கள் பக்கம் சம்மதம். உங்கள் பக்கம் தான் சம்மதம் இல்லை. உங்கள் அண்ணி என்னை ஏற்கவில்லை. உன்னை திருமணம் செய்து வைக்கவிடமாட்டேன் என கூறியிருக்கிறார் என்கிறார். அதற்கு வெற்றிவேல் திருமணம் எனக்கு தான், என் அண்ணனுக்கு இல்லை என கோபமாக பேசுகிறார்.

 

நீ ஜன்னல் கிட்ட வருகிறாயா என வெற்றிவேல் கேட்க… செந்தமிழ்செல்வியும் ஜன்னல் பக்கம் வருகிறார். அப்போது ஜன்னல் வழியாக வெற்றிவேலை பார்த்து பேசுகிறார். அப்போது செந்தமிழ்செல்வி வீட்டில் தோழி ஒருவர் உடன் இருப்பதை பார்த்து வெற்றிவேல் கோபமாக பேசுகிறார். இதன்மூலம் இந்த உரையாடல் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குடியிருப்பு வளாகத்தில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

 

பதிவு திருமணம்

 

அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை பணி பற்றி இருவரும் பேசுகிறார்கள். மேலும் பதிவுத்திருமணம் பற்றி இரவு பதில் சொல்ல வேண்டும் என செந்தமிழ் செல்வி கேட்க, அதற்கு சொல்கிறேன் என வெற்றிவேல் கூற, நான் கேட்கமாட்டேன் நீயாக போன் செய்ய வேண்டும் என செந்தமிழ்செல்வி கூறுகிறார். தொடர்ந்து என்ன ஆவணங்கள் தேவை என்பதை கூறுகிறேன் என வெற்றிவேல் தெரிவிக்க இருவரும் பை… பை… என கூறிவிட்டு இணைப்பை துண்டிக்கின்றனர். இந்த ஆடியோ 15 நிமிடம் 28 வினாடிகள் உள்ளது. செந்தமிழ்செல்வி தற்கொலை செய்த அன்று பகலில் வெற்றிவேலிடம் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது இந்த ஆடியோ சிறைக்காவலர்கள் வட்டாரத்தில் வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.