இந்திய இராணுவ நாய்கள் கொலை செய்யப்படுவது ஏன்?

0
Business trichy

இந்திய இராணுவ நாய்கள் கொலை செய்யப்படுவது ஏன்?

இந்தியாவின் காவல் பிரிவில் மட்டுமின்றி, ராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர்கவகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும்.

ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

Kavi furniture

ஆர்.டி.ஐ’யில் இருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் பதிலில், ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் இராணுவ நாய்களை ஏன் கொல்கிறார்கள்? ஓய்வு பெறும் நாய்களை மட்டும் தான் கொல்கிறார்களா? இதற்கான காரணங்கள் என்ன?

MDMK

இராணுவ நாய்கள் மட்டுமல்ல, குதிரைகளும் கூட உடற்தேர்வு குறைப்பாடு அல்லது நோய்வாய்ப்பட்டு போகும் போது, ஓய்வுபெறும் காலத்தை எட்டும் போது கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. Euthanasia என்று கூறப்படும் மனிதர்களால் வலியின்றி பிராணிகள் கொலை செய்யப்படும் முறையில் இராணுவ நாய்கள் மற்றும் குதிரைகள் கொலை செய்யப்படுகின்றன.

இதுக்குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் கூறும் போது, “ஒவ்வொரு இராணுவ நாயும் ஏதோ ஒரு சிறப்பு பிரிவில் பயிற்சி பெறுகின்றன. வெடிக்குண்டு கண்டிபிடித்தல், பாதுகாத்தல், விபத்து, காயம் பட்டவரை கண்டறிதல், காலாட்படை ரோந்து, கண்காணிப்பு என பல திறன் வேலைகளில் இராணுவ நாய்கள் பணிபுரிகின்றன.

இராணுவ நிபந்தனைகளின் படி தெரியாதவர்கள், தவறானவர்களின் கைகளில் இராணுவ நாய்கள் நோய் வாய்ப்பட்டோ, திறன் இழந்தோ, ஓய்வுபெற்ற பிறகோ சிக்கினால் அதனால் ஏதேனும் தவறுகள் ஏற்படலாம். அதனால் தேசத்திற்கு அபாயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால் தான் இராணுவ நாய்கள் சில காரணங்களால் இராணுவ பணியில் இருந்து விலகும் நிலை ஏற்படும் போது நிரந்தரமான, நிம்மதியான உறக்கமளிக்கப்பட்டு பிரியாவிடை பெறுகிறது என்று கூறுகிறார்கள்.

ஏன் பாதுகாப்பானவர்கள் கைகளில் ஓய்வுபெறும் நாய்களை ஒப்படைக்க கூடாது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், அவை வளர்ந்த விதம், அவை பெற்ற பயிற்சி போன்றவை மிகவும் இரகசியமானவை. அவற்றை பொதுமக்கள் கைகளில் அவ்வளவு எளிதாக கொடுத்துவிட முடியாது. எனவே, தான் வேறு வழியே இல்லாமல் அவை கொலை செய்யப்படுகின்றன என்று இராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இராணுவம் அல்லது இராணுவத்தினர் ஒன்றும் கடவுள் இல்லை. அவர்கள் எப்படி ஒரு உயிரை பறிக்கலாம் என்று சிலர் விலங்குகள் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். ஓய்வுபெறும் நாய்களுக்கு உண்ண உணவும், தங்க இடம் மட்டும்தானே தேவை. அதற்கான நிதியை இராணுவம் நிச்சயம் ஒதுக்கலாம். அவற்றை சாகும் வரை பாதுகாக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.