227 ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

0
D1

பல்கலைக்கழக இணைப்புக் கட்டணம் செலுத்தாத 227 ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

N2

தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தின் கீழ் 700 ஆசிரியர் கல்விக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்துக்கு, இக்கல்லூரிகள் இணைப்புக் கட்டணமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 75,000 ரூபாய் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டும்போது 50,000 ரூபாய் அபராதத்துடன் இணைப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இணைப்புக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. தற்போதுவரை, 227 ஆசிரியர் கல்விக் கல்லூரிகள் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இக்கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகப் பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். “பிப்ரவரி 4ஆம் தேதிக்கு முன்பு அல்லது 4ஆம் தேதியன்று இணைப்புக் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும். இல்லையென்றால், கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N3

Leave A Reply

Your email address will not be published.