‘வேதியியல் மாணவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்புகள்’- சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல்துறையின் பேரவை சார்பில் ‘வேதியியல் மாணவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் 25.01.2019 அன்று காலை 10.00 மணியளவில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தென்னிந்திய இயில்வே துறையின் வேதியியல் மற்றும் உலோகவியல் ஆய்வகத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும்ஜெகன் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார்.

வேதியியல் மாணவர்களுக்கான பல்வேறு தளங்களான தடயவியல் துறை, அணுஆற்றல் துறை, உணவியல் துறை, வேளாண்துறை, மாசுகட்டுப்பாட்டுத்துறை, நிலத்தடிநீர் ஆராயும் துறை, கல்வித்துறை மற்றும் சுங்கத்துறை போன்ற பல்வேறு தளங்களை எடுத்துரைத்ததோடு, அவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வலைதளங்களையும் குறிப்பிட்டார். மேலும் ரிசர்வ் வங்கி மற்றும் இஸ்ரோவில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். மாணவிகளுக்குப் பயனுள்ள வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

நிறைவாக, இணைப்பேராசிரியர் முனைவர் மலர்விழி நன்றியுரை நவில கருத்தரங்கம் இனிதே நடந்தேறியது.
