ஶ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் நிறுவனர் நாள் விழா

0

ஶ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவானது கடந்த 3ம் தேதி நடைபெற்றது. செயலர் குஞ்சிதபாதம் வரவேற்றார். பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மீனா தலைமை உரையாற்றினார்.

food

மாணவர்கள் கடின உழைப்பும், கல்வியும், முயற்சியும், தன்னம்பிக்கையும் பெற்றுத் திகழ வேண்டும். படிப்பு என்பது பணத்தை சேர்ப்பது  அல்ல. நல்ல பண்பை சேர்ப்பதில்தான் உள்ளது. எந்தவொரு பொருளுக்கும் மதிப்பை உணர்ந்தால் அப்பொருளின் அவசியத்தை உணர முடியும் என்றார்.

கல்லூரி தலைவர் ராமானுஜம், எளிமை, சிறப்பு மற்றும் அன்பு இவற்றின் உறைவிடமாய் திகழ்ந்த நிறுவனர் ஐயாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கல்லூரி நிர்வாகம் ரூ.10,37,135/-, வங்கி சார்பாக ரூ.1,00,000/- என 253 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கினார். கல்லூரி முதல்வர் வித்யாலெஷ்மி நன்றி கூறினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.