ப்ரூக்ளினில் எம்.ஜி.ஆர்

0
gif 1

1984- அக்டோபர் மாதத் தொடக்கம் ஒருநாள் நள்ளிரவு எம்.ஜி.ஆருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. சென்னை அப்பல்லோவிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
சோதனைகளின் முடிவில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லி மருத்துவ சிகிச்சைகள் தொடங்கின. இரண்டு நாட்களில் அடுத்த அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பக்கவாதம் தாக்கியிருக்கிறது என்றார். வெளியே செய்தி கசிந்து மக்கள் தவித்தனர்.

கிராமப்பகுதிகளிலிருந்து மக்களும் தொண்டர்களும் சென்னைவர தொடங்கினர். மேலும் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது எல்லோரையும் கவலைகொள்ளச் செய்தது. எம்.ஜி.ஆர் உயிர் பிழைக்க வேண்டும் என்று உண்ணாவிரதங்கள் ஒருபக்கம், வேண்டுதல்களும், யாகங்களும், அங்கப்பிரதட்சணங்களும் மறுபக்கம்.ஆலயங்கள், மசூதிகள், சர்ச்சுகள் எந்த ஒரு வித்தியாசமுமின்றி தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நலம்பெற பிரார்த்தனைகள் நடைபெற்றன.

எம்.ஜி.ஆர் உயிர் மீள வேண்டும் என அவருடைய ரசிகர்கள் மொட்டையடித்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று வருகிறார். மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார் என்று தகவல்கள் வெளியான போது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் ஆவேசத்துடன் எழுந்து பேசினார். சிறுநீரக சிகிச்சைக்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மருத்துவமனையில் எம்.ஜி.ஆருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். அவர் திமுக சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனாவார்.

gif 3

துரைமுருகன் மாணவராக இருந்தபோது அவருடைய கல்விச்செலவுகளுக்காக
எம்.ஜி.ஆர் நிதிஉதவி நிறைய செய்திருந்தார்) நரம்பு மண்டலம், இருதயம், சிறுநீரகம் என்று மூன்று உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்தந்த துறையைச் சார்ந்த நிபுணர்களை உடனடியாக சென்னைக்கு அழைத்துவர ஏற்பாடுகளை அமைச்சர் பொன்னையன் கவனித்தார். ஒட்டுமொத்த தமிழகமே கவலைப்பட்டபோது, எம்.ஜி.ஆர் அரசியல் எதிரியான கருணாநிதி தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். தலைப்பு: “நானும் பிரார்த்தனை செய்கிறேன்” 12 ஆண்டு பகையை நாற்பதாண்டு கால நட்பு பனிகட்டியைப்போல் கரைந்துவிட்டதற்கு காரணம் உங்கள் நோய்பற்றி கேள்விபட்டவுடன் என்கண்கள் அருவிகளானதுதான்.

 

பிரார்த்தனை என்பதற்கு வேண்டுகோள் என்றும் ஒரு பொருள் உண்டு. நானும் பிரார்த்தனை செய்கிறேன். கடிதம் எழுதியதோடு திமுக மேடைகளில் எம்.ஜி.ஆர் பற்றியோ அவருடைய நோய் பற்றியோ யாரும் எதுவும் பேசிவிடக்கூடாது என கட்சிக்காரர்களுக்கு உத்தரவு போட்டார் கருணாநிதி.
எம்.ஜி.ஆரின் உடல் நிலை சிக்கலான காலக்கட்டத்தில் இருந்ததால் அவரை பார்ப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மனைவி ஜானகியைத் தவிர நெடுஞ்செழியன்,
ஆர்.எம்.வீரப்பன். சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே போன்ற வெகுசிலரே எம்.ஜி.ஆருக்கு அருகில் அனுமதிக்கப்பட்டனர். முக்கியமாக ஜெயலலிதாவை அருகில் அனுமதிக்கவே இல்லை. எல்லாம் மூத்த தலைவர்களின் சதி என்று கண்டனம் செய்தார் ஜெயலலிதா. அக்டோபர் 16 அன்று பிரதமர் இந்திராகாந்தி சென்னை வந்தார். நேராக மருத்துவமனைக்கு வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். செலவைப்பற்றி கவலைப்பட வேண்டாம். உடனடியாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குள் நிலமை மேலும் மோசமடைந்தது. திடீரென பேசும் சக்தியை இழந்தார் எம்.ஜி.ஆர்.

 

gif 4

எம்.ஜி.ஆருக்கு மூச்சுத்திணறல். மூளைப்பகுதியில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர் மருத்துவர்கள் ஆனால் இங்கே இருப்பவர்களால் செய்ய முடியாது. ஜப்பானில் இருக்கும் நரம்பியல் மருத்துவர் டாக்டர் கானு வரவேண்டும் என்றனர். டோக்கியோ, சிங்கப்பூர் என்று பல இடங்களிலும் தொடர்புகொண்டு டாக்டர் கானுவை சென்னைக்கு அழைத்து வருவதற்குள் தமிழகமே கதிகலங்கிப் போயிருந்தது. டாக்டர் கானுவும் வந்தார். அவசர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. மூச்சுத்திணறல் குறைந்தது. இனியும் தாமதிக்க வேண்டாம். அமெரிக்கா புறப்படலாம் என்றனர் மருத்துவர்கள். அமெரிக்கவிற்கு எம்.ஜி.ஆரை அழைத்துச் செல்வதற்கு தனி விமானம் தேவைப்பட்டது. டெல்லியை தொடர்புகொண்டனர் அமைச்சர்கள். பிரதமர் இந்திராவும் ஏர்இந்தியா விமானத்தை அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

 

அந்த விமானம் எம்.ஜி.ஆரை அழைத்து செல்வதற்கு முன் பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் அமெரிக்கா செல்லப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தபோது தமிழக மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

 

அப்போது அதிர்ச்சியூட்டும் செய்தி பாதுகாவலர்களாலேயே பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டார் என்ற செய்தி. இந்த அதிர்ச்சி செய்தியை எம்.ஜி.ஆரிடம் சொல்லவேண்டாம் என்றனர் மருத்துவர்கள். வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவிகளை செய்தவர் இந்திரா. அவர் கொல்லப்பட்ட செய்தி தெரியாமலேயே அமெரிக்கா புறப்பட்டார் எம்.ஜி.ஆர் விமானம் கிளம்ப இருக்கும்போது, நிறுத்துங்கள் என்றனர் மருத்துவர்கள். என்ன? ஏது? என்று விசாரித்தபோது எம்.ஜி.ஆரின் நிலை இறுதி கட்டத்தை அடைந்து விட்டது என்றனர். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து புறப்பட இருந்த அத்தனை பேருக்குமே மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. 15 நிமிடங்களுக்கு விமானத்திற்குள்ளேயே உணர்ச்சிப்போராட்டமே நடந்தது. பிறகு விமானம் புறப்பட்டது.

 

நியூயார்க் நகரில் இருக்கிறது ப்ரூக்ளின் மருத்துவமனை. நரம்பியல், சிறுநீரகம், இருதயம் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் அங்கே சிறப்பான நிவாரணம் கிடைக்கும். டாக்டர் ஃப்ரிட்மேன் என்பவர்தான் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவின் தலைவர் சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக கட்சி கோஷ்டி மோதல் காரணமாக சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது.

 

மாநிலத்தின் முதல்வர் பெரிய அரசியல் கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மருத்துவசிகிச்சைக்காக வெளிநாடு செல்லும்போது ஆட்சிக்கும் கட்சிக்கும் ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அல்லவா? அதற்காக நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன் ஆகிய இரண்டு தலைவர்கள் ஆட்சி, கட்சி இரண்டையும் தங்களது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் எல்லாவிஷயத்திலும் கருத்தொற்றுமை இருந்ததா என்று தெரியாது. ஆனால், ஜெயலலிதாவை ஒதுக்கி வைக்கும் விஷயத்தில் ஓரணியில் திரண்டிருந்தனர். இந்த சமயத்தில் டெல்லியில் இந்திராகாந்தியின் மூத்தமகன் ராஜீவ்காந்தி அவசர அவசரமாக பிரதமராக ஆக்கப்பட்டிருந்தார்.

-ஆர்.பி.பூபேஷ்

gif 2

Leave A Reply

Your email address will not be published.