சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான திருச்சி, கிராப்பட்டி செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி “கலாஞ்சலி – 2K19 ” ஆண்டு விழா

0
full

“அளவான அன்பும், தேவையான கண்டிப்பும் மனிதநேய மிக்க மாணாக்கர்களை உருவாக்கும்” செல்லம்மாள் பள்ளி ஆண்டு விழாவில் சௌடாம்பிகா கல்விக்குழுமத்தலைவர் ராமமூர்த்தி பேச்சு.

சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான கிராப்பட்டி செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா கலாஞ்சலி – 2019 நடைபெற்றது.

சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.   சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின்    செயலாளர் செந்தூர் செல்வன் மற்றும் கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.

poster

சிறப்பு விருந்தினராக மலர்ச்சி அமைப்பின் நிறுவனர் பரமன் பச்சை முத்து கலந்து கொண்டு செல்லம்மாள் பள்ளியில் படித்து, தற்சமயம் சிறந்த கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் +2 மாணாக்கர்களுக்கும், 10 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணாக்களக்கும், தேசிய தடகள வீரங்கனை கெவினா அஸ்வினிக்கும், பேட்மிட்டன், யோகா, செஸ் உள்ளிட்டவற்றில் மாநில, மாவட்ட அளவில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது

மாணாக்கர்களின் ஒழுக்கமும், நடவடிக்கைகளும் படிப்புடன் இணையும் போது எளிதில் வெற்றி பெறுவார்கள்.

ukr

மாணவப்பருவத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டிய சூழலில், கவனச்சிதறலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.  படிக்கும் சூழலை உருவாக்கி தருவதில் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.  கல்வியை சர்வதேச அளவிலான தரத்தில் செல்லம்மாள் பள்ளி வழங்கி வருகிறது என்றார்.

சௌடாம்பிகா கல்வி குழும தலைவர் ராமமூர்த்தி பேசியதாவது:

பொறுமையில் சிறந்த பெற்றோர்களும், தொடர்ந்து முயற்சி செய்யும் மாணாக்கர்களும் சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் ஆசிரியர்களுடன் கைகோர்க்கும் போது சாதனைகளும், வெற்றிகளும் குவிகின்றன.

பெற்றோர்கள், மாணாக்கர்கள் மீது அளவான அன்பும், தேவையான கண்டிப்பும் காட்ட வேண்டும்.  அதனுடன் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் போதனையும் இணையும் போது மனித நேயமும் நாட்டுப்பற்றும் மனித நேயமிக்க நல்ல மனிதர்களை இந்த சமூகத்திற்கு உருவாக்கி கொடுக்க முடியும் என்றார்.

விழாவில் பள்ளி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

“உணர்வுகள்” என்ற மையக்கருத்துள்ள மாணவ, மாணவிகளின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.