செல்போன் சிகரெட்டிற்கு சமம்

0
1 full

கரூர் வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலில் திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் ராகவன் செல்போன் கோபுரங்களினால் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.

மேலும், இது குறித்து மாணவர்களிடம் அவர் பேசுகையில், ஒரு நாளைக்கு 6 நிமிடங்களுக்கு மேல் கைபேசியை உபயோகிப்பதும், சிக்னல் கிடைக்காத கைபேசிகளை கொண்டு பேசமுயற்சிப்பதும் உடலுக்கு நல்லதல்ல.

செல்போன் கோபுரங்கள் வீச்சும் கதிரின் மின்காந்த அலைகளின் சக்தியை குறைத்தால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவைகளின் மீது கதிர்வீச்சு ஏற்படுத்தும் தாக்கத்தை வெகுவாக குறைக்க இயலும். செல்போன் சிகரெட்டிற்கு சமம். சிகரெட் ஏடில் புகையை காணலாம். மின்காந்த அலைகளை காணுவது இயலாது. இன்னும் சொல்லப்போனால், புகைபிடித்தலை விட கைபேசிகளின் கதிர்வீச்சு உடலில் பல சரிசெய்யமுடியாத வியாதிகளை உண்டாக்கும்.

2 full

செல்போன் இதயத்தின் அல்லது வேறு பாகங்களின் அருகில் இருப்பின் அதனால் ஏற்படும் உஷ்ணத்தன்மையை யாரும் உணருவதில்லை. கைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் ஞாபகமறதி போன்ற பல்வேறு மூளை நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறோம் என்றார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.