ஒன்வேயில் வரும் வாகனங்கள்!

சும்மா தெருவில் நின்று கொண்டிருக்கும் கார் ஓட்டுநர்களை தொந்தரவு செய்து பணம் பறிப்பதும்,( இதற்கு சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட கார் ஓட்டுநர் சாட்சி)லாரி போன்ற சரக்கு வாகனங்களை மறித்து லஞ்ச வேட்டை செய்வதும்,தேவையின்றி உள்ளூர் இடங்களில் நின்று கொண்டு இரு சக்கர வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்து பணம் வசூல் செய்வதும்,சதா கைபேசியை பேசிக் கொண்டும்,அரட்டை அடித்துக் கொண்டுஇருப்பதும்,இதுதான் இன்றைய போக்குவரத்து காவலர்களின் நிலமை.சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் அருகில் டிராபிக் ஜாம் ஆகி விட்டன. அதனை 5 போக்குவரத்து போலீசார் இருந்தும் சரிசெய்ய முடியவில்லை. பின்னர் இரண்டே இரண்டு இளைஞர்கள் மிக அருமையாக அதனை கையாண்டு போக்குவரத்தை சரி செய்தார்கள்.ஒரு ஜீப்பில் போக்குவரத்து உயர் காவலர் அமர்ந்து 2 கான்ஸ்டபிள்கள் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை மறைத்து ஜீப்பில் அமர்ந்திருக்கும் உயர் அதிகாரிகளிடம் அனுப்புவார் இது அல்ல அபராதம் வசூலிக்கும் முறை.வண்டியின் எண்களை குறித்து வைத்துக்கொண்டு பின்னர் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் நீதிமன்றத்திற்கு சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும்.இதுதான் சட்டம் சொல்கின்றது. அபராத தொகையை வசூலிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை. நீதித்துறைக்கே உள்ளது.இவைகளெல்லாம் காவலர்கள் மீது உள்ள தவறுகள்.அரசின் மீதும் சில தவறுகள் உள்ளன. இன்றும் பல இடங்களில் சிக்னல் லைட்கள் எரியாமல் உள்ளன. பல இடங்களில் நோ என்ட்ரி,ஒன் வே பகுதியில் ஒரு போலீசார் கூட காணப்படுவதில்லை. திருச்சி சிங்காரத் தோப்பு பகுதி முழுவதும் ஒன் வே. ஆனால் இதனை சரியாக கடைபிடிப்பதில்லை.வாகன ஓட்டிகளுக்கு இப்பகுதி ஒன்று என்பதே தெரியவில்லை… காரணம் ஒன் வே என்று ஒரு பதாதிகள் கூட காணப்படுவதில்லை.காவலர் இல்லை.தீபாவளி,பொங்கல் என்று வந்தால் போக்குவரத்து போலீசார் இவ்விடத்திற்கு வந்து வசூல் வேட்டையில் ஈடுபடுவார்கள்.அப்போதுதான் தெரியும் இப்பகுதி ஒன் வே என்று. ஆகையால் உடனடியாக இப்பகுதியில் காவலர்களை நியமித்து பொதுமக்களின் சிரமத்தை குறைக்க அரசும், அதிகாரிகளும், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
