‘இவர்களைச் சமாளிப்பது ஒன்றும் பெரிய காரியம் அல்ல’ ‘ப்ளூ சட்டை’ மாறன்

0
1

சார்லி சாப்ளின் 2 படத்தை விமர்சித்தது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் சக்தி சிதம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
ஊடகப் பின்புலம் இல்லாமல் சினிமா மீது ஆர்வம் கொண்ட பலரும் யூ டியூப் சேனல் தொடங்கித் திரை விமர்சனம் செய்வது தற்போது அதிகரித்துள்ளது. இதற்குப் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பும் நிலவுகிறது. அவர்களில் ப்ளூ சட்டை மாறன் தனது பாமரத் தனமான பேச்சு மொழியால் ஒரு பார்வையாளர்கள் வட்டத்தைக் கொண்டுள்ளார். நக்கலுடன் படக்குழுவை பாரபட்சமின்றி விமர்சிப்பதால் வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் அவரது பேச்சு தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

 

இந்நிலையில் சார்லி சாப்ளின் 2 படத்தை தரக் குறைவாக விமர்சித்ததாகவும், இயக்குநருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதன் இயக்குநர் சக்தி சிதம்பரம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் ஆன் லைன் இதழுக்கு அளித்த பேட்டியில்… அவர், “நான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. நான் விமர்சனம் செய்யத் தொடங்கியதில் இருந்தே இப்படியான பொய் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இது கருத்துரிமைக்கு எதிரானது. அவர்கள் கொடுத்த புகாரை நான் சட்ட ரீதியாகச் சந்திப்பேன்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “என் மீது புகார் கொடுத்தவர்கள் ஒரு டம்மி பீஸ். நான் தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் தான் அத்தகைய தரத்தில் படங்கள் எடுக்கிறார்கள். நடிகையை என்ன மாதிரி படத்தில் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் யாரும் கலை சேவைப் புரிந்துவிடவில்லை. இவர்களுக்கு எதிராக நான் எந்தப் புகாரும் அளிக்கப்போவதில்லை. தமது கருத்தைச் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. என்னைத் திரை விமர்சனம் செய்யக் கூடாது என்று யாரும் கூறமுடியாது.

 

2

பேட்ட படத்தை விமர்சித்ததால் அதன் தயாரிப்பு நிறுவனமான சன் டிவி என் வீடியோவை யூ டியூப் தளத்தில் இருந்து அகற்றியது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அதை சமாளித்து சில மணிநேரங்களில் அந்த வீடியோவை திரும்பக் கொண்டு வந்தேன். எனவே இவர்களைச் சமாளிப்பது பெரிய காரியம் அல்ல. தொடர்ந்து எனது பாணியில் படங்களை விமர்சிப்பேன்” என்றார் தனக்கே உரிய பாணியில்.
சார்லி சாப்ளின் 2 விமர்சனம் சர்ச்சையை சந்தித்த பின் அது தற்போது அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.