முருகன் தன் வேலினால் உருவாக்கிய சக்தி தீர்த்தம்

0
D1

சோழ மன்னர்களால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் மிகப் பிரபலமடைந்தது.

சோழமன்னர்கள் இப்பகுதிக்கு வந்து வேட்டையாடிக்கொண்டிருந்தபோது தாகம் எடுத்ததாம். அப்போது மூன்று கிளைகளாக அமைந்து வளர்ந்திருந்த ஒரு கரும்பினை ஒடித்து தாகம் தீர்க்க முயன்றபோது கரும்பிலிருந்து உதிரம் கசிந்தது. பயத்துடன் அவ்விடத்தை தோண்டியபோது கரும்பு வளர்ந்த அடிப்பகுதியில் சிவலிங்கம் தென்பட்டதாம், உடனே மன்னரின் ஆணைக்கேற்ப   இத்திருக்கோயில் அமைக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனராம்.

D2

இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. தல விருட்சம் வன்னிமரம். முருகன் தன் வேலினால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் கோயிலின் முகப்பில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

சிறிய சட்டத்தேர் ஒன்று உள்ளது. வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

N2

வசந்த மண்டபம், தியான மண்டபம், முன்மண்டபங்கள் மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள், ஓய்வு விடுதி மாடி மண்டபம் ஆகியவை உள்ளன.தம்மை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோள்களை மறவாமல் நிறைவேற்றுவதுடன் அவர்களின் துயரங்களை போக்குவதால் ஆதிநாதர் என்னும் மூலவரை மறப்பிலி நாதர் எனவும், அக்னி வழிபட்டமையால் அக்னீஸ்வரன் என்றும் வழங்கலானார்.

வடமுகம் நோக்கி அமர்ந்திருக்கும் ஆதிநாயகி இத்தலத்தின் தனிச்சிறப்பு.

இங்குள்ள பொய்யாக் கணபதி கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனப் பொருள் கூறுகின்றனர். இது முத்தித் தலம் .

இங்கு தாண்டவக் கோலத்தில் இருப்பினும், உற்சவரின் காலடியில் முயலகன் உருவகம் கிடையாது. தில்லை அம்பல நடராசனைப் போலன்றி, ஆடிய பாதனார் இத்தலத்தில் அமைதியான தோற்றம் கொண்டு காணப்படுகிறார்.

தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாயகியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பு.

இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது.

அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட எம்பிரான் முருகப் பெருமான் வயலூருக்கு அவரை அழைத்து அதன் சிறப்புக்களைப் பாமாலையாகத் தொடுக்க வைத்தான். இவை அனைத்தும் நம் திருச்சி குமாரவயலூரில்தான்.

N3

Leave A Reply

Your email address will not be published.