நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் லால்குடியில் டிடிவி தினகரன் பேச்சு

0

திருச்சி லால்குடிக்கு கடந்த 27ம் தேதி வருகை புரிந்த அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரனுக்கு சிறுதையூர் ரவுண்டானாவில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். லால்குடி ஒன்றிய செயலாளர் விஜயமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் தர்மதுரை, நகர செயலாளர் காத்தான், ஒன்றிய துணை செயலாளர் குகன், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருகின்ற இந்த மக்கள் விரோத, துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களால் வழி நடத்தப்படுகின்ற இயக்கம் தான் அமமுக. இந்த இயக்கத்தால் தான் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

food

எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். குறிப்பாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற பொது தேர்தலோடு, 20 தொகுதிகளின் சட்டமன்ற இடைத் தேர்தலும் வர இருக்கிறது. அப்போது, இந்த ஆட்சிக்கு நீங்கள் முடிவு கட்டுங்கள். அமமுகவிற்கு நிச்சயம் குக்கர் சின்னம் கிடைக்கும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

இதில் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கணேஷ்பாபு, அம்மா பேரவை மாவட்ட தலைவர் ஜின்னா ஜாகிர் உசேன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் தர்மராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.