துணிபை சவால்! Cloth Bag Challenge!

உலக புற்றுநோய் தினமான இன்று (4-2-2019) காவேரி மருத்துவமனை மற்றும் சைன் டிரிச்சி (Shine Treechy) இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த Cloth Bag Challenge என்ற நூதன விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியை துவக்கியுள்ளது.
இந்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில் காவேரி மருத்துவனையின் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் மற்றும் சைன் டிரிச்சி (Shine Treechy) தன்னார்வ நிறுவனத்தை நடத்திவரும் மனோஜ் தர்மர் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் பை தவிர்போம் என்ற வாசகத்தை உடைய துணிப்பையை திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்கள். திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அவர்கள் அதை பெற்றுக்கொண்டு இந்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.


மேலும் அவர் கூறுகையில் மக்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். மேலும், மக்களிடையே நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
காவேரி மருத்துவனையின் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் கூறுகையில் பிளாஸ்டிக் பொட்களின் பயன்பாட்டால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று நிரூபிக்கப்படவில்லை, ஆனால் இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் கூறினார். எனவே பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் அறவே தவிர்த்து அதற்கு மாற்றாக துணி பைகள் பயன்படுத்த முன் வர வேண்டும் என்றும், மேலும் பிளாஸ்டிக் பை தவிர்போம் எனும் வாசகம் அச்சிட்ட 5000 துணிபைகளை பொது மக்களிடம் வழங்கி இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
இத்துடன் இந்த நிகழ்வின் போது காவேரி மருத்துவனையின் இணை தலைவர் அன்பு செழியன், மருத்துவ நிர்வாகி செந்தில்வேல் முருகன் மற்றும் காவேரி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அனிஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
