இந்த 6 அறிகுறிகள் பெண்களுக்கு ஆபத்து…

0
Business trichy

கருப்பை நீர்க்கட்டிகள் இனப்பெருக்க அமைப்புகளில் தோன்றும் பருக்கள் போன்றவை.
மேலும் இவை கிருமித்தொற்றுகள், கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கருப்பையின் அசாதாரண வளர்ச்சி போன்ற காரணங்களினால் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும் இதன் அறிகுறியை முன்கூட்டியே கவனித்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் அதனை எளிதில் குணமாக்க முடியும்.

 

இடுப்பு வலி : மாதவிடாய் முடிந்த பின்னும் இடுப்பில் வலி நீடித்தால் அவர்களுக்கு கருப்பையில் கட்டி உள்ளதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த நிலை ஏற்படும்போது அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்வது மிகவும் நல்லது.
வயிறு வீக்கம் : வயிறு வீக்கமடைவது அல்லது அடிவயிற்று வலி போன்றவை கூட சில சமயங்களில் கட்டிகள் உருவாக வழி வகுக்கின்றன.

மேலும் வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.
வயிறு நிரம்பிய உணர்வு : வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது மிகவும் நல்லது.

loan point
web designer

அடிக்கடி சிறுநீர் கழித்தல்: சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும் இவையெல்லாம் கருப்பையில் கட்டி உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். மேலும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

nammalvar

உறவின் போது வலி : கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

முதுகு மற்றும் கால் வலி : பெண்களுக்கு அடிக்கடி முதுகு வலி அல்லது கால் வலி ஏற்பட்டால் அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம். எனவே தீராத முதுகு வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.