பெற்றோர் – மாணவர் உறவை விட ஆசிரியர் & மாணவர் உறவு சிறப்பானது – கலெக்டர் ராசாமணி

0
Business trichy

குழந்தைகளை நல்லொழுக்கம் மிக்கவர்களாக வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது !

திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேச்சு

 

சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் அங்கமான திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியின் ஆண்டு விழா & கலாகிரித்தி என்ற பெயரில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Image

விழாவிற்கு சௌடாம்பிகா கல்விக்குழுமத் தலைவர் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் அங்கமான திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியின் ஆண்டு விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.ராசாமணி பள்ளி ஆண்டு மலர் ”மிர்ரர்” ஐ வெளியிட, சௌடாம்பிகா கல்விக்குழும தலைவர் டாக்டர். எஸ்.ராமமூர்த்தி பெற்றுக்கொண்டார். அருகில் சௌடாம்பிகா கல்விக்குழும செயலாளர் ஆர்.செந்தூர்செல்வன், கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ராஜாமணி கலந்து கொண்டு,  பள்ளி ஆண்டு மலர் ”மிர்ரர்” ஐ வெளியிட, சௌடாம்பிகா கல்விக்குழும தலைவர் டாக்டர். எஸ்.ராமமூர்த்தி பெற்றுக்கொண்டார். மேலும் கடந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் மண்டல அளவில் சிறப்பிடம் மாணவர்களுக்கும், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் முதல், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கும், ஐ.ஐ.டி. காரக்பூரில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற மாணவர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது;

 

சௌடாம்பிகா கல்விக்குழுமம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்வித்துறையில் மிகுந்த சேவைப் மனப்பான்மையோடு, நகர்ப்பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கல்வி தர வேண்டும் என்ற நோக்கில் மிக சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  கல்வித்துறையோடு இணைந்து சௌடாம்பிகா கல்விக்குழுமம் சிறப்பான கல்வியை வழங்குவதில் மாவட்டத்தில் முன்னணியில் உள்ளது.

 

கல்வியில் மட்டுமின்றி, திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி மாநகரின் முன்னேற்றத்திற்காக சௌடாம்பிகா கல்விக்குழுமம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சி தலைவர் என்ற முறையில் நான் சௌடாம்பிகா கல்விக்குழுமத்தை மனதார பாராட்டுகிறேன்.

 

பள்ளிக்காலம் தான் மாணவர்களின் வாழ்க்கையின் பெரும்பான்மையான காலம். பள்ளிக்காலம் என்பது ஒரு நல்ல மகிழ்ச்சியான, அவர்களுடைய வாழ்க்கையில் எந்த விதமான வருத்தமும் இல்லாத,  பசுமையான மகிழ்ச்சியான ஆரவாரமான எதர்த்தமான காலமாக இருக்கிறது.  எனவே அவர்கள் படிக்க வேண்டும். இந்த காலத்தில் தான், மாணவர்களின் மனம் என்பது வெளிப்படையாக, வெகுளியாக, விளையாட்டாக இருக்கக்கூடிய காலம். அதே நேரத்தில் படிப்பிற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

 

மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி சர்வதேச தரத்தில் கல்வியோடு மட்டுமல்லாது, மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டதாகவும், பெற்றோர் மற்றும் மாணவர்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு வசதிகள், வாய்ப்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. பள்ளிபடிப்பை முடித்து எதிர்காலத்தில் உயர்கல்வி பெற முழு அளவில் மாணவர்களை தயார்படுத்தும் இடமாக இந்த பள்ளி அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.

Rashinee album
சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் அங்கமான திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியின் ஆண்டு விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.ராசாமணி மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார். அருகில் சௌடாம்பிகா கல்விக்குழும தலைவர் டாக்டர். எஸ்.ராமமூர்த்தி, சௌடாம்பிகா கல்விக்குழும செயலாளர் ஆர்.செந்தூர்செல்வன், கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் மற்றும் பள்ளி முதல்வர்.

இன்றைய மின்னணு உலகில் மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் அதிகமாக இருக்கின்றன. வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகள் திசை மாறவும், குழப்பமடையவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

 

ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு குழந்தையை அன்போடு அரவணைக்க வேண்டும். முன்பெல்லாம் ஆசிரியர் & மாணவர் உறவு, பெற்றோருடன் மாணவர் உறவை விட சிறப்பானதாக அமைந்திருந்தது. தற்போது காலமாற்றத்தில் அவசர சூழலில் எல்லாம் குறைந்து விட்டது. தற்போது ஆசிரியர்கள் இரட்டிப்பாக, பன்மடங்காக மாணவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

 

மாணவர்களிடம் நல்ல விஷயம், நல்ல பண்புகளை தொடர்ந்து போதிக்கும்பொழுது, அவர்களிடம் நல்ல பண்புகள் தழைத்தோங்கும். கவனசிதறல்கள் ஏற்படாது.

 

இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிக முக்கியத்துவம், அதிக கவனிப்பு, அதிக தேவை கொள்ள வேண்டும். படிப்பு மட்டுமின்றி ஒவ்வொருவருடைய திறமை என்னவென்று கண்டறிந்து அவர்களே அந்த திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை இந்த மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி ஒரு தளமாக உள்ளது.

 

மாணவர்கள் கவன சிதறலில் சிக்கிக் கொள்ளாமல், கொண்ட லட்சியத்திலும், கொள்கையிலும் கவனத்தை ஒருமுகப்படுத்தி இலக்கை அடைய வைப்பதில் பெற்றோரை போன்றே ஆசிரியர்களுக்கும் பெரும் பங்குண்டு. அப்படிப்பட்ட தரமான ஆசிரியர்களை மவுண்ட் லிட்டரா ஸி பள்ளி கொண்டுள்ளது.

 

பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது மாணவர்கள் தலைமை பண்பு, செயல்வல்லமை, ஆற்றல் உள்ளிட்டவைகளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சவால்களை சமாளிக்க முடியும். அதற்கு இந்த பள்ளி வழிகோலும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

 

முன்னதாக சௌடாம்பிகா கல்விக்குழு செயலாளர் ஆர்.செந்தூர் செல்வன் பேசுகையில், சர்வதேச அளவிலான கல்வியை மாணவர்களுக்கு இங்கு அளித்து வருகிறோம். இப்பள்ளி கல்வியில் மட்டுமல்லாது பிற தனித்திறன்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆய்வகங்கள், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்களுடன் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் சூழல் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகள் மிக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

தொழில்நுட்ப அடிப்படையிலான கற்பிக்கும் முறையை செயல்படுத்தி வருகிறோம். மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் தினந்தோறும் 20 நிமிடங்கள் புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவற்றை வாசிப்பதை செயல்படுத்தி வருகிறோம். இப்பள்ளியில் பயின்று 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.