இயக்குநர் சுந்தர்.சி. செய்தது பச்சை துரோகம் மட்டுமல்ல – சிம்பு பட விமர்சனம்..

0
1

சுந்தர்.சி. செய்தது பச்சை துரோகம் மட்டுமல்ல சிவப்பு…கருப்பு…வெள்ளை துரோகம். இப்படம் தெலுங்கு பட ‘ரீமேக்’ என்றார்கள். ஆனால், சுந்தர்.சி ஏற்கனவே எடுத்த அட்டர்ஃப்ளாப் தமிழ் படமான ‘ஆம்பள’ படத்தைதான் ‘கோக்குமாக்’ செய்து மீண்டும் ‘ரீடேக்’ செய்துள்ளார். அப்படி, ரீடேக் செய்யும்போது அட்லீஸ்ட் கதாப்பாத்திரங்களையாவது மாற்றியிருக்கலாம். ஆனால், அதிலும் இதிலும் ரிப்பீட் பிரபு- ரம்யா கிருஷ்ணன். அதே, அத்தை – அத்தை பொண்ணுங்க கான்செப்ட்.

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீர் திடீரென நடுவே தியேட்டரில் ஒருவரின் கைத்தட்டல் சப்தமும் விசில் சப்தமும் ஒலிக்க… ‘கைத்தட்டி விசில் அடிக்கிற அளவுக்கு அப்படியென்ன காட்சி?’ என்பதுபோல் அனைவரும் மேஜிக் ஷோ பண்ணும் வடிவேலுவைப் பார்ப்பதுபோல் திரையைப்பார்த்துவிட்டு அப்படியே அந்த நபரை திரும்பிப்பார்க்கிறார்கள்.

அப்படி கைத்தட்டி விசில் அடிப்பவர்
நிச்சயமாக சிம்பு ரசிகராகத்தான் ம்ஹூம் உற்றுப்பார்த்தால் சிம்புவாகத்தான் இருப்பார் என்று மைண்ட் வாய்ஸ் சமாதானப்படுத்தியது.

2

படம் முழுக்க யார் வந்தாலும் அடித்துவீசும் வழக்கமான ஹீரோவாக ‘போர்’ அடிக்கவைக்கிறார் சிம்பு. டி.ஆர். நடித்த வீராச்சாமியைகூட பார்த்துவிடலாம் போலிருக்கிறது. ஆனால், வ.ரா.வ. மிடிய்ய்ய்ய்ய்யல.

போக்கிரி படத்தில் பிரகாஷ்ராஜ் கொல்லும்போது நாசர் சிரிப்பாரே, அதுபோல குத்துயிரும் குலையுயிரமாய் இருக்கும் பார்வையாளர்கள் யோகிபாபுவின் சில நிமிட காட்சிகளை சிரித்து கண்ணை மூடுகிறார்கள்.

சிம்பு சிம்புவாகத்தான் இருக்கிறார். ஆனால், சுந்தர்.சி. செய்தது பச்சை துரோகம் மட்டுமல்ல சிவப்பு…கருப்பு…வெள்ளை துரோகம். வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற சிம்பு… ஹெச்.ராஜாவாகத்தான் வந்திருக்கிறார்!!! 🙂

– வினி சர்பனா

3

Leave A Reply

Your email address will not be published.