நினைத்ததை முடித்தவர் எம்.ஜி.ஆர்.

0
1

பெண் வாக்காளர்களின் ஓட்டுக்கள் ஏன் எப்போதும் ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆர் கட்சிக்கே போகிறதென்று அரசியல் ஜாம்பவான்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது. எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையும், அது எத்தனை ஆயிரம் பேரை வாழவைத்திருக்கின்றதென்பது அவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது.
இந்திய தேர்தல்கள் திருவிழாபோல் ஆரம்பித்து தெருவிழாக்களாக மாறி சவால்கள் விடப்பட்டு அதற்கு பதில் சவால்கள் விடப்பட்டு சிலநேரங்களில் வெறித்தனமாகவும், வன்முறையாகவும் மாறும் ஒரு கலவை.

 

இவ்வளவும் ஒரு ஓட்டுக்கு பின்னால் இருக்கும் மகத்தான சக்திகள். எம்.ஜி.ஆருக்கும், அவரது கட்சிக்கும், பணபலமோ, சாதிபலமோ, குண்டர் படைத்தொண்டர்களோ, மதங்களின் ஆதரவோ இல்லை. இவ்வளவும் ஒரு ஓட்டுக்குப்பின்னால் இருக்கும் மகத்தான சக்திகள். எம்.ஜி.ஆருக்கும், 5 வயதான அவரது கட்சிக்கும் மேற்சொன்ன வசதிகள் இல்லை.

திண்டுக்கல்லிலும் கோவை மேற்கிலும் பாண்டிச்சேரி சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.வை 3ம் இடத்திற்கு விரட்டிக் காண்பித்தார் எம்.ஜி.ஆர். சாதுர்யமிக்க கலைஞரோ மக்கள் தீர்ப்பை மதிக்காமல் எல்லாம் சினிமா கவர்ச்சி என்றார். கவர்ச்சி கலையும் போது அதிகாரமும் சிதறும் என்றார். பொது தேர்தலில் தான் கட்சியின் உண்மைநிலை தெரியவரும். திண்டுக்கல் ஒரு தற்காலிக வெற்றியே என்றார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இந்த சவாலை ஏற்றார். கட்சியின் கிளைகள் வெளி மாநிலங்களில் துவக்கப்பட்டதால் அ.தி.மு.க. என்பதே அ.இ.அ.தி.மு.க.என்று மாறிய தனது கட்சியின் பிரச்சாரத்தை அவருக்கே உரித்தான அற்புதமான முறையில் ஆரம்பித்தார்.

2

லட்சக்கணக்கில் கூடிய மக்கள் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரின் கூட்டணிக்கு 36 இடங்களை வாரி வழங்கினர். இந்திராகாந்தியின் சொந்த மாநிலமான உ.பியில் அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் இங்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 16 இடங்களை பிடித்தது. சில காங். தலைவர்கள் இந்த நாடாளுமன்ற வெற்றியானது இந்திராகாந்தியால்தான் என்றார்கள்.

4

ஆந்திரம், கர்நாடகத்தில் அது உண்மையே. ஆனால் தமிழகத்தில் எங்கும் வீசப்போவது எம்.ஜி.ஆர். அலையே என்பது அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெளிவாகியது. 1977 மேமாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் தனியே நின்றன. தங்களால் தான் அதிமுக வெற்றி பெற்றது என்று நினைத்த காங். வ.கம்யூவுடன் சேர்ந்து தனியே நின்றது. தி.மு.க.வும் முஸ்லீம் லீக் ஒருபுறமும், ஜனதா மத்தியில் ஆளும் கட்சி என்பதால் நம்பிக்கையுடன் 3வது புறம். அரசியலில் குழந்தையான அதிமுக அனுபவம் பெற்ற இத்தனை கட்சிகளையும் எதிர்த்து தனியே நின்றது. இ.கம்யூ எம்.ஜி.ஆருடன் சேர்ந்தது. எம்.ஜி.ஆர். எல்லோரையும் அரவணைத்து அவர் சென்ற இடங்களில் எல்லாம் யாத்திரை தலங்கள் போல மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

முதல்நாள் காலை 10 மணிக்கு பழனி வருவார் என்றால் அடுத்த நாள் மாலை 5 மணிக்குத்தான் அங்கு வருவார். ஆனாலும் அவர் பேச்சை கேட்க கூட்டம் காத்திருக்கும். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மக்கள் அந்த மதிப்பை தரவில்லை. திட்டியே வளர்ந்த திருக்குவளையார் எம்.ஜி.ஆரை பேசாத, கூறாத வார்த்தைகள் இல்லை. மக்கள் திலகமான எம்.ஜி.ஆர். மக்களை திடமாக நம்பினார். தன்னுடைய அரசியல் பேச்சுக்களை மக்களிடம் ;கொண்டு சேர்த்தார்.

 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று அ.தி.மு.க.வின் தலைமை கழகமான லாயிட்ஸ் ரோடு மக்கள் மடைதிறந்த வெள்ளமாக கூடினர். வெற்றிமேல் வெற்றி எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இந்திய அரசியல் வரலாற்றில் 5 வயதான ஒரு மாநிலக்கட்சிக்கு மக்கள் தங்களை ஆள உத்தரவளித்தது சரித்திர சான்றாக இன்றுவரை வாழ்கிறது.

மக்களால் பெற்ற வெற்றியே மக்களின் முன்னால் தான் பதவியேற்க இருப்பதாக அறிவித்தார். சென்னை அண்ணாசிலை அருகே நடைபெற்ற அந்த விழாவில் மக்கள் எல்லாதிசையிலிருந்து ஆர்ப்பரித்து கூடினர்.
சென்னை நகரமே விழாக்கோலம் கொண்டது. அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை முன்பு 10 லட்சம் மக்களின் முன் நின்ற புரட்சித்தலைவர் உணர்ச்சி வசப்படாமல் பேசினார். மக்கள் குரலே மகேசன் குரல் எங்கள் உயிரைக் கொடுத்தேனும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவோம் என்று சொன்னபோது ஆரவாரம் விண்ணை பிழந்தது.

தொடரும்…

3

Leave A Reply

Your email address will not be published.