புனித வளனார் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தரும் HCL சிவநாடார்

0
Business trichy

திருச்சி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளிப்பின் 175ம் ஆண்டு ஜீபிலி விழாவிற்கு 4.2.2019 அன்று இப்பள்ளியின் முன்னாள் மாணவர் HCL சிவநாடார் சிறப்பு விருந்துனராக பங்கேற்க உள்ளார்.

web designer

திருச்செந்தூர் அருகே மூலைப்பொழி என்னும் கிராமத்தில் சிவசுப்பிரமணியன், வாமசுந்தி ஆகியோருக்கு மகனாக கடந்த 1945ம் ஆண்டு பிறந்தவர் சிவநாடார். தனது இடைநிலைக்கல்வியை 1958 முதல் 1961ம் ஆண்டு வரை தருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி பயின்றவர். தனது பட்டப்படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், பொறியியல் படிப்பை கோவை PSG கல்லூரியிலும் படித்தவர். ஆரம்பகாலத்தில் தனது நண்பர்களோடு DCM நிறுவனத்தில் பணியாற்றினார். பின்பு 1980ம் ஆண்டு HCL நிறுவனத்தை நிறுவினார். தனது கடின உழைப்பாள் இந்நிறுவனத்தை உலக அளவில் வளர்ச்சியடைச்செய்து இலட்சக்கணக்கான மக்களுக்க வேலைவாய்ப்பும், கணினித் துறையில் எழுச்சியையும் புரட்சியையும் உருவாக்கக் கூடிய நிறுவனமாக வளர்த்தெடுத்தார். இவர் இந்திய அளவில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். 2008ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி கௌரவித்தது. இந்நிலையில், திருச்சி புனித வளனார் மேல்நிலைப்பள்ளிப்பின் 175ம் ஆண்டு ஜீபிலி விழாவிற்கு வரும் 4ம் தேதி சிறப்பு விருந்துனராக பங்கேற்க உள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.