தேசியவாக்காளர் தினஉறுதிமொழி

நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக கடந்த 25ம் தேதி கல்லூரியின் பொருளாளர் ஹாஜி.எம்.ஜே.ஜமால் முகமது மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர். எஸ்.இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் முன்னிலையில் தேசியவாக்காளர் தின உறுதிமொழி ஏற்புநிகழ்ச்சி கல்லூரிவளாகத்தில் நடைபெற்றது.

இதில் பகுதி ஐந்து ஒருங்கிணைப்பாளர் மேஜர் என். அப்துல்அலி, கணிதத்துறை பேராசிரியர் முனைவர் ஜாகிர் உசேன், நாட்டுநலப்பணித் திட்டஅலுவலர் முனைவர் எம். காமராஜ் உட்பட மற்ற அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பெருமளவில் பங்குகொண்டு தேசியவாக்காளர் தினஉறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
