2025ஆம் ஆண்டில்தான் ராமர் கோயில் வரும்! ஆர்எஸ்எஸ் கிண்டல்

0
Business trichy

நரேந்திர மோடி அரசைக் கிண்டல் செய்யும் விதமாக, ராமர் கோயில் 2025ஆம் ஆண்டில்தான் கட்டப்படும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பைய்யாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், “அயோத்தி விவகாரத்துக்கு அரசியலமைப்பின் கீழ் தீர்வு காணப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம்” என்று கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.. சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் இதனைக் குறிப்பிட்டுப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் கட்டுவதில் மத்திய அரசு காட்டும் விருப்பமின்மையால் இந்துத்துவ அமைப்புகள் ஏமாற்றத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். கோயில் கட்டுவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.

MDMK

இதன் தொடர்ச்சியாக, 2025ஆம் ஆண்டில் ராமர் கோயில் கட்டமைப்புப் பணிகள் தொடங்கிய பிறகு நாடு மிக வேகமாக வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளார் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பைய்யாஜி ஜோஷி. “1952ஆம் ஆண்டில் சோம்நாத் கோயில் கட்டமைக்கப்பட்டபோது நாடு எந்த வேகத்தில் வளர்ச்சியடைந்ததோ, அதே வேகத்தில் ராமர் கோயில் கட்டமைப்பின்போதும் வளரும். ராமர் கோயில் கட்டமைக்கப்பட்ட பிறகு, அடுத்த 150 ஆண்டுகளுக்கு நாட்டுக்குத் தேவையான மூலதனம் கிடைக்கும்” என்று பைய்யாஜி ஜோஷி கூறினார்.

Kavi furniture

2025ஆம் ஆண்டில்தான் ராமர் கோயில் கட்டப்படும் என்று பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளது, வரும் மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றிபெற்றாலும் ராமர் கோயில் கட்ட வாய்ப்பில்லை என்று ஆர்எஸ்எஸ் நம்புவதையே குறிப்பதாகத் தெரிவித்துள்ளனர் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த எட்டு ஆண்டுகளாக ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் ஜனவரி 29 அன்று இவ்வழக்கை விசாரிக்கவுள்ளது உச்ச நீதிமன்றம்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.