உலக பணத்தாள்கள் நாணயங்கள் மற்றும் புத்தகக் கண்காட்சி

0
1 full

ஜமால் முஹம்மது தன்னாட்சிக் கல்லூரி பெண்கள் ரோட்ராக்ட்  சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள் நாணயங்கள் மற்றும் புத்தகக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஜமால் முஹம்மது கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முஹம்மது ஷாகிப், முதல்வர் இஸ்மாயில் மொஹிதீன், துணை முதல்வர் முஹம்மத் இப்ராஹிம், ஒருங்கிணைப்பாளர் அப்துல் அலி, சங்க ஆலோசகர் சோபியா உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2 full

கண்காட்சியில் பல்லவர் சேரர் சோழர் பாண்டியர் நாயக்கர் சுல்தான் உள்ளிட்டோர் நாணயங்களும் பிரிட்டிஷ் இந்தியா சுதந்திர இந்தியா நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா அண்டார்டிகா, பங்களாதேஷ், புருனே, பூட்டான், சிரியா, கனடா, காங்கோ, டென்மார்க், இங்கிலாந்து, எகிப்த், கயானா, அயர்லாந்து, செக்கோலோவாகியா லைபீரியா, மடகாஸ்கர், மலேசியா, நியூசிலாந்து, ஓமென், குவைத், ரஷ்யா, சிங்கப்பூர், வியட்னாம், சிம்பாப்வே உட்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டு அந்நாட்டின் வரலாறு பொருளாதாரம் கலாச்சாரம் உள்ளிட்டவை மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டன.

புத்தக கண்காட்சியில் தமிழ் ஆங்கிலம் வரலாறு கலை இலக்கியம் விளையாட்டு உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  நம்ம திருச்சி வார இதழ் சார்பாக இதழ்கள் காட்சிப்படுத்தப் பட்டன.  யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹம்மது, சுபேர், குணசேகரன், அப்துல் அஜீஸ், கமலக்கண்ணன் பாரத், அந்தோணி ஜெய்கர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

   

3 half

Leave A Reply

Your email address will not be published.