முதலில் ஜெயலலிதா அறையை உடைத்தோம்

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது கொலை குற்றச்சாட்டுகள் முன்வைத்த சயனும், மனோஜும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆஜர் ஆகும் முன்பு வரை அவர்கள் இருவரும் கேரளாவில்தான் இருந்தார்கள். தெகல்கா மேத்யூ வழிகாட்டலில் தான் அவர்கள் இருவரும் இயங்குகிறார்கள்.
இறந்துபோன கனகராஜுக்கு அடுத்தபடியாக கொடநாடு எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பதை முழுமையாக தெரிந்த ஒரே நபர் சயன் தான். ஜெயலலிதா அறை, சசிகலா அறை என ஒவ்வொன்றுக்கும் கனகராஜுடன் போனது சயன் தான். கனகராஜும், சயனும் முதலில் ஜெயலலிதா அறையைத்தான் உடைத்து உள்ளே போனார்களாம். அங்கேதான் என்ன டாக்குமெண்ட்களை எடுக்க வேண்டும் என்பதை யாருடனோ போனில் பேசியபடியேதான் பைக்குள் எடுத்து வைத்திருக்கிறார் கனகராஜ். அதேபோல கொடநாட்டுக்குள் நுழையும் போதே ஒட்டுமொத்தமாக அந்த பகுதிக்கே மின்சார இணைப்பை துண்டிக்க சொல்லி கனகராஜ் யாருக்கோ உத்தரவிட, சில நிமிடங்களில் பவர் கட் ஆகி இருக்கிறது. கொடநாடு பங்களாவில் முழுக்கவே டார்ச் லைட்டை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் கனகராஜ். அதுவும் லைட் அடித்து ஒவ்வொரு டாக்குமெண்ட்டையும் புரட்டிப் பார்த்துதான் பையில் வைத்திருக்கிறார்.

‘நாம எதை எடுக்க வந்தோமோ அதை மட்டும்தான் எடுக்கணும். தேவை இல்லாமல் வேற பொருள் மேல கை வைக்காதீங்க…’ என அந்த இருட்டிலும் அட்வைஸ் செய்திருக்கிறார் கனகராஜ். சரியாக 2 மணி நேரம் 20 நிமிடங்கள் கொடநாடு பங்களாவுக்குள் இருந்திருக்கிறது அந்த டீம். கையோடு கொண்டு போன பைக்குள் டாக்குமெண்ட்களை நிரப்பிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். ஒரு டீம் கோவைக்கும் இன்னொரு டீம் சேலத்துக்கும் பிரிந்துவிட்டார்கள். சேலம் டீமில்தான் சயனும் கனகராஜும் இருந்திருக்கிறார்கள்.

சேலத்துக்கு போன டீம் கையில்தான் கொடநாட்டில் எடுத்த டாக்குமெண்ட்கள் எல்லாம் இருந்ததாம்.
‘நான் எல்லாத்தையும் அண்ணன்கிட்ட சொல்லிட்டேன். நீயும் வந்திருக்கேன்னு சொன்னேன். இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொல்லிட்டாரு. இது வெளியே தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும்னு அவரு பயப்படுறாரு..’ என்று அப்போது கனகராஜே சயனிடம் சொன்னாராம்.
தொடர்ச்சி உள்ளே…
