“மங்கியதோர் நிலவினிலே”

0
1 full

கண்கள் இதுகாறும் காணாத பேரழகோ

வண்ணப் பாற்கடலோ வரமான வடிவழகோ

பெண்ணென இங்குதித்த விண் மகளோ

2 full

மங்கிய நிலவன்று சிந்திய சிறு ஒளியில்

பொங்கிய உளமதிற் புகுந்தாள் இவளின்

கண்களின் அசைவே ‘எழுத்து’

கனியிதழ்கள் திறப்பதே ‘சொல்’

கன்னியழகே என் வாழ்வின் ‘பொருள்’

நூலிடை பயில் நடையே ‘யாப்பு’

பாலினும் வெண்மைப் புன்னகையே ‘அணி’

ஐந்திலக்கணமும் இவளிடம் இருக்க
வேறெங்கு போய் எனக்கேது கற்க?

யாரிவள் என்றேன் எனக்குள் என்னையே

உள்ளம் சொன்னது இவள் ‘தமிழன்னையே’ !

3 half

Leave A Reply

Your email address will not be published.