திருச்சி வங்கி கொள்ளையர்களுக்கு உதவியது யார் ?

திருச்சி வங்கி கொள்ளையர்களுக்கு உதவியது யார் ?
திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது இந்த வங்கி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வங்கி வாடிக்கையாளராக உள்ளனர்.

வழக்கம்போல் வங்கி பணியை முடித்துவிட்டு 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வங்கியை பூட்டிவிட்டு வங்கி ஊழியர்கள் சென்றுள்ளனர் இந்நிலையில் இன்று காலை வங்கியை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் வங்கியின் லாக்கர் பகுதியிலுள்ள பின்புறம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சமயபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சமயபுரம் ஆய்வாளர் மதன் உள்ளிட்ட காவலர்கள் மோப்பநாய் உதவியுடன் வங்கியில் ஆய்வு செய்தனர் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் டிஐஜி லலிதா லட்சுமி ஆகியோர் வங்கியின் உள்ளே சென்று வங்கி ஊழியர்களிடமும் cctv footage களைக் கொண்டும் ஆய்வு செய்து வருகின்றனர் .

மேலும் இந்த வங்கியில் ஐந்து லாக்கர்கள் குறைக்கப்பட்டுள்ளதால் நகை பணம் என ஐந்து கோடி ரூபாய்க்கு மேலே கொள்ளை போய் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் இந்த வங்கியின் பின்புறத்தில் கடப்பாரை சிலிண்டர்கள் வெல்டிங் மிஷின் முகமூடி கொள்ளையர்கள் அணிந்துவந்த முகமூடிகள் போன்றவையே அங்கே கழற்றி விட்டு சென்றுள்ளனர் மேலும் இந்த கொலை சம்பவத்தில் 5 அல்லது 6 பேர் ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரிய வருகிறது.

இந்த பகுதி மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியாக இருக்கும் பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்தது இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் வங்கியின் முன்பே வங்கியின் வாடிக்கையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர் தங்கள் பணம் நகை கிடைக்குமா இருக்கா இல்லையா என்று அதிகாரிகளும் கேட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த மாதம் ஜனவரி ஏழாம் தேதி உப்பிலியபுரம் ஐஓபி வங்கியில் பின்னால் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது அதேபோல இந்த மாதம் 18 ஆம் தேதி சமயபுரம் காவல் நிலையம் அருகே உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் பின்னால் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது மேலும் இந்த மாதம் 21ஆம் தேதி மணச்சநல்லூர் பகுதியில் கொசமட்டம் பைனான்ஸ் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது.
மேலும் நொச்சியம் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் பல ஆயிரம் ரூபாய் கொள்ளை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.மேலும் இந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கியின் முன்புறமுள்ள ஏடிஎம்மில் கொள்ளை சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட யாரையும் இதுவரை கைது செய்ததால் இந்த பகுதி மட்டுமல்லாது அனைத்து மக்களுமே அதிர்ச்சியில் உள்ளனர் திருடர்கள் போலீஸின் உதவியுடன் செயல்படுகிறார் என்று பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இந்த வங்கியில் லாக்கர் எண் 39 ஜமால், 114 உமா மகேஸ்வரி, 223 சுரேஷ் குமார் ஆகியோரின் தனிநபர்களின் லாக்கரும், துவாக்குடி மற்றும் சிறுகனூரில் உள்ள ஜிகே தொழில் நிறுவனத்தின் 299 மற்றும் 300 லாக்கர்கள் முற்றிலும் உடைக்கப்பட்டு இவற்றில் இருந்து மட்டும் சுமார் 700 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் கொள்ளையர்கள் வங்கியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களுக்கான ஹார்டு டிஸ்க்கையும் கழற்றி சென்று விட்டனர்.
