திருச்சி ஏ.கே.கே.வி. பள்ளியில் அனுராக் விழா

0
1 full

திருச்சி துறையூர் சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் ஓர் அங்கமான அண்ணாமலை நகர் ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 26ம் தேதி அனுராக் 2019  விழா நடைபெற்றது.

விழாவுக்கு சௌடாம்பிகா கல்வி குழுமங்களின்  தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் செந்தூர் செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் முன்னிலை வகித்தார்.  சுமங்கலி செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் ஷியாமளா ரமேஷ் பாபு கலந்து கொண்டு. பேசியதாவது…

குழந்தை வளர்ப்பு முன் பயிற்சி இல்லாத காரணத்தால் பெற்றோர்களுக்குச் சவாலாக உள்ளது. பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்ததும் அவர்கள் கூறுவதைக் கவனமாகவும்,  பொறுமையாகவும், பெற்றோர்கள் கேட்க வேண்டும்.  கண்டிப்பும் தண்டனையும் அளவோடு இருக்க வேண்டும்.  பாராட்டுக்காக குழந்தைகள் ஏங்குவதால் தன்னம்பிக்கை தரும் சொற்களைக் கொண்டு பாராட்டுங்கள் என்று சிறப்பு விருந்தினர் பெற்றோர்களுக்கு ஆலோசனைக் கூறினார்.

2 full

எங்கெல்லாம் கண்டிப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் ஒழுக்கம் இருக்கும்.  கனிவுடன் கூடிய கண்டிப்புதான் நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, ஊக்கம் போன்ற நற்பண்புகளைக் கொடுக்கும். மேற்கண்டவற்றை சௌடாம்பிகா கல்வி குழுமம் மிகவும் சிறப்பாக போதிக்கின்றது என்று  கூறினார். மேலும் தேர்வுகளில் சாதனைப்படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து  சௌடாம்பிகா கல்விக் குழுமங்களின் தலைவர் ராமமூர்த்தி பேசியதாவது:-

ஒவ்வொரு மாணவர்களிடமும் தன்னம்பிக்கை வேண்டும். பல கஷ்டங்களுக்கு இடையில் சிவில்சர்வீஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பட்டுக்கோட்டை பிராபாகரன் போல் மாணவர்கள் கஷ்டங்களை கடந்து, குடும்பங்களைக் காப்பாற்றி முன்னேற வேண்டும்.  மேலும்,  பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கடந்து வந்த பாதைகள், இனி கடக்க வேண்டிய பாதைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மணவிகளின் கலை நிகழ்ச்சிகள் , நாடகங்கள் நடைபெற்றது.  அதில் பிளாஸ்டிக் ஒழிப்புக் குறித்து  சிறப்பு நாடகமும், மரங்களை அழிப்பதால் மழை வளம் குறைவது குறித்த நாடகமும் நடைப்பெற்றது.

விழாவில் பள்ளி முதல்வர்கள் ராஜ்மோகன், ரமேஷ்குமார்,  துணை முதல்வர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.   முடிவில் மாணவி பிரியா நன்றி கூறினார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.