தண்ணீர் குடிப்பது எப்படி

0

திருச்சி மாவட்ட எச்.ஐ. வியுடன் வாழ்வோர் கூட்டமைப்பு மற்றும் எம்பவர் டிரஸ்ட், திருச்சிராப்பள்ளி இணைந்து பாதுகாக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பற்றி எச்.ஐ.வியுடன் வாழும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை 27.01.2019 அன்று திருச்சிராப்பள்ளி, கீதா நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி சுந்தர் நகரில் அமைந்துள்ள குடும்ப நல மையத்தின் சமூக மருத்துவர் R. கீதா அவர்கள்  ஒவ்வொரு மனிதருக்கும் குடிநீர்  அடிப்படையான ஒன்றாகும் என்றார். பாதுகாக்கப்பட்ட குடிநீரால் உடல்நலம் நோயிலிருந்து பாதுகாக்கப்படும் என்றும், ஒவ்வொரு குழந்தையும் குறைந்தது 3 லிட்டர் குடிநீராவது பருக வேண்டும் என்றார். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்பது நீரை காய்ச்சி குடிக்கலாம்; குளோரின் பவுடர் கலந்து குடிக்கலாம். புறஊதா கதிர்கள் மூலம் பருகலாம்; ஆர்ஓ நீரை குடிக்கலாம்; ஃபோலியா வாட்டர் பில்டர் மூலம் பருகலாம்  என்றார்.

‌சந்தா 1

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (இஸ்ரோ) ஓய்வு பெற்ற விஞ்ஞானி திரு. முத்துராமன் அவர்கள், ஃபோலியா வாட்டர் பில்டர் என்ற நானோ சில்வர் இழை துகள்களை கொண்டு உருவாக்கப்பட்ட தண்ணீர் வடிகட்டும் தாளைப் பயன்படுத்தி சுகாதாரமான பாதுகாப்பான குடிநீரை குழந்தைகளே தயார் செய்வதற்கான செயல்முறை விளக்கத்தை அளித்தார்.

சந்தா 2

அமெரிக்க வாழ் இந்திய மாணவர் ஸ்ரீகர் கொல்லிபாரா என்பவர்  தன்னுடைய பள்ளி பாடத்திட்டத்தில் ஒருபகுதியாக இந்த ஃபோலியா வாட்டர் பில்டர் தாள்களை பயன்படுத்தி பாதுகாப்பான குடிநீர் தயாரிப்பதை ஏழை மற்றும் கிராமப்புற மக்களிடம் ஒரு கனவு திட்டமாக செயல்படுத்தி வருகிறார்.  இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஃபோலியா வாட்டர் பில்டர் என்ற நானோ தாள்களை இந்தியாவிற்கு அனுப்பி ஏழை குழந்தைகள் பயன்படுத்துமாறு வேண்டியுள்ளார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் முனைவர் கனிமொழி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மற்றும் திருச்சி மாவட்ட எச்.ஐ. வியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் திருமதி A. தமிழ் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மேற்கண்ட கூட்டமைப்பின்  களப்பணியாளர் நாகேந்திரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாமணி, எம்பவர் டிரஸ்ட் உறுப்பினர் தங்கதுரை, வாழும் கலை அமைப்பின் யோகா பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் திருமதி.கலாவதி முத்துராமன்    ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.