ஏ.டி.எம். ரகசிய எண்களை கேட்கும் மர்ம ஆசாமி!

6383615504 என்ற எண்ணில் இருந்து “நம்ம திருச்சி” நிருபருக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் தான் ஒரு வங்கி அதிகாரி என்றும் உங்களின் ஏ.டி.எம். ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டன ஆகையால் உங்கள் ஏ.டி.எம். ரகசிய எண்னை சொல்லவும் நாங்கள் அதற்கு பதில் வேறொரு ஏ.டி.எம். ரகசிய எண்களை தருகிறோம் என்றார்.நீங்கள் எந்த வங்கி? உங்கள் பெயர் என்ன? எந்த மாநிலம்?என்று நிருபர் கேட்டார்.முன்னுக்குப்பின் முரண்பாடான பதிகளை கூறினார் அந்த நபர்.எனக்கு வங்கி கணக்கே இல்லை! பின்னர் எப்படி எனக்கு ஏ.டி.எம். ரகசிய எண்கள் இருக்கும்?என விடாது நிருபர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.தொடர்பை துண்டித்தார் அந்த மர்ம ஆசாமி.உடனடியாக இதைப்பற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு நிருபர் நடந்ததை கூறினார்.மிக அருமையாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிவுரை வழங்கப்பட்டது பாராட்டுக்கள். பின்னர் ஸ்ரீரங்கம் காவல் நிலைய தொடர்பு எண்களை கொடுத்து புகார்களை கூறுமாறு அறிவுறுத்தப்பட்டது. உடனே நிருபரும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு புகார் கூறினார்.இதில் என்ன வேதனை என்றால் மிகவும் அசால்ட்டாக பதில் கூறினார். ஒரு அசம்பவம் நடந்தது பின்னே நடவடிக்கைகளை எடுத்து என்ன பயன்? சம்பவத்தை தடுப்பதே சிறந்த நடவடிக்கையாகும்.இதனை காவல்துறை எப்போதுதான் சிந்திக்க போகிறதோ? என்று தெரியவில்லை.மக்களாகிய நாம்தான் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.தான் வங்கி அதிகாரி என்று கூறிக்கொண்டோ அல்லது வேறு யாராவது உங்களின் ரகசிய எண்களை கேட்டால் உடனே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ளவும்.
