உலகத்தையே பிரமிக்க வைத்த இலட்சகணக்காணோர் திரண்ட திருச்சி மாநாடு !

0
Business trichy

உலகத்தையே பிரமிக்க வைத்த இலட்சகணக்காணோர் திரண்ட திருச்சி மாநாடு !

 

முஸ்லிம்கள் மாநாட்டை (இஜ்திமா) இந்த ஆண்டு திருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. 33 வருடங்களுக்கு பிறகு திருச்சியில் நடைபெறுகிறது என்பது தான் இதன் சிறப்பு இதற்கான பணிகள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் தலைமையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே சுமார் 700 ஏக்கர் பரப்பளவில்  தொடங்கின.

Kavi furniture

இதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரவை பகலாக்கும் வகையில் உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

 

இதைத்தொடர்ந்து  சனிக்கிழமை காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

 

மாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனாதைகளை ஆதரித்தல், ஏழை-எளியோருக்கு உதவுதல், மகளிருக்குரிய உரிமை மற்றும் சலுகைகளை இஸ்லாமியம் அருளியபடி முறையாக கொடுத்து அவர்களை கவுரவப்படுத்துவது, குழந்தை வளர்ப்பு முறை பற்றி போதித்தல், வணிகத்தில் நேர்மை, கொடுக்கல்-வாங்கலில் நேர்மை, மது இல்லா வாழ்வு, உயரிய பண்பாட்டோடு வாழ்வது, இழிவு பேசுவதை தவிர்த்து வாழ்வது குறித்து தினமும் சொற்பொழிவு நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதேபோல பஜ்ர், லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய 5 வேளை தொழுகையும் மாநாடு திடலில் நடைபெற்றது.

MDMK

வளர்ந்து வரும் நாகரிக உலகில் பிரமாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாறாக நபிவழி சுன்னத் என்பதன் அடிப்படையில் எளிமையான முறையில் ஞாயிற்றுகிழமை) மாலை மாநாட்டு திடலில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

 

மாநாட்டின் ஒரு பகுதி

 

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரெயில் மூலமும் அதிக அளவில் முஸ்லிம்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

நிறைவு நாளான  அதிகாலை மாநாடு தொடங்கியது. மதியம் வரை மார்க்கம் தொடர்பான பல்வேறு சொற்பொழிவுகள், வெளியூர் செல்லும் ஜமாத்தினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மதியம் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு துஆ ஓதப்பட்டது. தப்லீக் இஜ்திமாவின் அகில உலக பொறுப்பாளர் டெல்லியை சேர்ந்த முகமது சக்கது மவுலானா நிறைவு சொற்பொழிவை இந்தியில் நிகழ்த்தினார். அது, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. 32 நிமிடங்கள் சிறப்பு துஆ எனும் பிரார்த்தனை நடைபெற்றது.

இறை அச்சத்தோடு வாழ்தல், இம்மை மற்றும் மறுமைக்கான வாழ்வு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவும், பிறருக்கு உதவுதல், கீழ்படிதல், உதவி புரிவது, தொண்டு புரிதல், ஈமானோடு இறுதி வரை இருப்பது, இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த துஆ வில் கேட்கப்பட்டது. மாநாட்டு திடல் நிரம்பி வழிந்ததால் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் வெளியில் நின்றபடி துஆ வில் கலந்து கொண்டனர். துஆ முடிந்ததும் அனைவரும் கலைந்து செல்ல தொடங்கினர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதை கடைபிடித்து அனைவரும் சென்றனர்.

மாநாடு நடைபெற்ற 3 நாட்களும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அதற்கான பணியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இரவு-பகலாக ஈடுபட்டனர். இதேபோல மாநாட்டு திடலை சுற்றி பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் இரவு-பகலாக மருத்துவர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

 

மாநாட்டையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூ தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

திருச்சியில் பல இலட்சக்கணக்கில் கலந்து கொண்ட இந்த மாநாட்டை திருச்சியை உலகமே திரும்பிபார்க்க வைத்துள்ளது.

15 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் திரண்டு தன்னுடைய ஆன்மீக மார்கத்தின் வழி நெறிகளை போதித்து அதை எந்த வித சங்கடம், சச்சரவு இன்றி நடந்து முடிந்திருக்கிறது என்பது அனைத்து மதத்தினருக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த மாநாடு என்கிறார்கள் மூத்த குடிமக்கள்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.