ஆசிரியர்களை தேசிய கொடியேற்ற விடாமல் தடுத்த பெற்றோர். !

0
1 full

ஆசிரியர்களை தேசிய கொடியேற்ற விடாமல் அரசு பள்ளிக்கு ‘பூட்டு’ பெற்றோர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்வதோடு பல்வேறு போராட்டங் களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவில்லை.

 

2 full

இதேபோல் திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே கல்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் ஆசிரியர்கள் போராட்டத்தால் கடந்த 3 நாட்களாக திறக்கப்படவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 

இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி நேற்று இந்த பள்ளியில் தேசிய கொடியேற்ற அங்கு பணியாற்றும் சில ஆசிரியர்கள் வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஒன்று திரண்டு வந்து எங்கள் குழந்தைகளுக்கு கடந்த 3 நாட்களாக பாடம் நடத்த ஒருவரும் வரவில்லை. இப்போது மட்டும் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு பள்ளியின் முன்புற கேட்டை இழுத்து பூட்டினர்.

 

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை ஆசிரியர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். நீண்டநேரம் பேசிப்பார்த்தும் சமாதானம் ஆகாததால் தேசிய கொடி ஏற்றாமலேயே ஆசிரியர்கள் திரும்பி சென்றனர்.

 

இதேபோல, துவரங்குறிச்சியை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட யாகபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 183 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த பள்ளியிலும் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. நேற்று தேசிய கொடியேற்ற வந்த ஆசிரியர்களை மாணவர்களின் பெற்றோர்கள் கொடியேற்ற விடாமல் தடுத்தனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மருங்காபுரி தாசில்தார் ரபீக்அகமது மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், அந்த பள்ளியில் காலதாமதமாக கொடி ஏற்றப்பட்டது.

3 half

Leave A Reply

Your email address will not be published.