பெண்குழந்தைகளுக்கான தற்காப்பு பயிற்சி

0
1

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு கன்மலை அறக்கட்டளை சார்பாக பாலின பாகுபாட்டை நீக்கி, சமூகத்தில் பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்தி, அவர்களுக்கு அதிக ஆதரவு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் நேற்று  TELC தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி (தரங்கை வாசல்) , TELC தொடக்கப்பள்ளி பொன்மலைபட்டி, ஸ்ரீ சாய்வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி மற்றும் ராமநாதநல்லூர் மாலை நேரப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு மிக முக்கியமான விழிப்புணர்வு செய்திகளை வழங்கவும் தற்காப்பு கலைகள் கற்றுதர ஏற்பாடு செய்யதிருந்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வை கன்மலை தொண்டு நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் வில்பிரட் எடிசன் தலைமைவகித்தார்,  சிறப்பு விருந்தினராக திருமதி.கவிஞர் கவிசெல்வா கலந்து கொண்டார். மேலும் ஸ்ரீரஞ்சனி மெர்சி,ஹேமலதா,மாலினி  செல்வி. தீபா மற்றும் 200 மேற்ப்பட்ட பெண் குழந்தைகள் பங்குபெற்றனர்.

ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி பெருமை சேர்க்கும் பெண் குழந்தைகளின் சாதனைகளை போற்றும் விதமாகவும்
இந்திய சமூகத்தில் பெண் குழந்தைகள் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கும் வகையில் கன்மலை அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

4

குழந்தைத் திருமணங்களால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. இதை பல ஆய்வுகள் நமக்கு உணர்த்தி உள்ளன. இளம் வயதில் குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் இந்த பெண்கள், குழந்தைப் பேறு சிக்கல், பிரசவ கால மரணம் என பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர்.

2

பாலியல் வன்முறைகளாலும் பெண் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வன்முறையில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க தனி சட்டம் உள்ளது. ஆனாலும், இந்த கொடுமைகளின் சுவடுகள் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன.

இதுபோன்ற நிலையை மாற்றுவதற்கு மக்கள் மனதில் முதலில் மாறறம் ஏற்பட வேண்டும். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு அடிமனதில் ஏற்பட்டால் மட்டுமே இந்த மாற்றம் சாத்தியமாகும். பெண் குழந்தைகளுக்கு சம உரிமை வழங்கி அவர்களைப் பேணிப் பாதுகாக்க இந்த நாளில் உறுதிமொழி கன்மலை அறக்கட்டளை சார்பாக எடுக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.