திருச்சி பூ வியாபாரி நடத்திய  நிர்வாண போராட்டம் – அதிர்ச்சியான போலிஸ்

0

திருச்சி பூ வியாபாரி நடத்திய  நிர்வாண போராட்டம் – அதிர்ச்சியான போலிஸ்

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் முடங்கியுள்ளன. இது குறித்த வழக்கில் ின்று 25ம் தேதிக்குள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் ஜாக்டோ- ஜியா போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

food

அப்போது அவ்வழியே  பூ வியாபாரி சிவகுமார் என்பவர் வந்தார். அவர் செல்ல வழியில்லாமல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் நாட்டில் விவசாயிகள், வியாபாரிகள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம். நீங்கள் லட்சக்கணக்கில் வாங்கும் சம்பளம் போதாதா? இன்னும் வேண்டுமா என்று போராட்டம் நடத்தியவர்களுடனும், சமாதானம் பேச வந்த போலீசாருடனும் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அவர் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக சாலையில் நின்றார்.  இதையடுத்து கன்டோன்மென்ட் போலீசார் அவரைகுண்டுகட்டாக தூக்கி  ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.