திருச்சி குடியரசு தினவிழாவில் 1,500 போலீசார் பாதுகாப்பு ஏன் ?

0
D1

திருச்சி குடியரசு தினவிழாவில் 1,500 போலீசார் பாதுகாப்பு ஏன் ?

 

குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 

குடியரசு தின விழா நாளை (26ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தி் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் ராஜாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். பின்னர் விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரப்படுத்துகிறார். அதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

 

D2
N2

குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் கமிஷனர் அமல்ராஜ்  மற்றும் திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மேலும் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், கோயில்கள், சர்ச்கள், மசூதிகள் உள்ள பகுதிகளில் பேட்ரோல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பார்சல் பிரிவில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் மூலம் தீவிர சோதனை நடத்தினர். அதுபோல் ரயில் நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.திருச்சி விமான நிலையத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கடந்த 20ம்தேதி முதல் பார்வையாளர் மாடம் மூடப்பட்டது. விமான பயணிகளின் உடைமைகள், கார், பைக்குகள் தீவிர சோதனைக்கு பின்னரே முகப்பு பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விமான நிலையத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 

மேலும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.