டிஜிட்டல் மார்கெட்டிங்கில் கொட்டி கிடக்கும் வாய்ப்புகள் என்ன தெரியுமா ?

24 ஜனவரி 2019 நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சி தூய வளனார் கல்லூரி வணிகவியல் துறை (CA) மற்றும் இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் அங்கமான Skillset அகடமியும் இணைந்து “டிஜிட்டல் மார்கெட்டிங்” என்னும் தலைப்பில் கருத்தமர்வு தூய வளனார் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த கருத்தமர்வில் GEE GEE Media Works ன் நிறுவனர் கங்காதரன் மற்றும் இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் அங்கமான Skillset அகடமியின் இயக்குநருமான அந்தோணி ஜெய்கர் கலந்து கொண்டு டிஜிட்டல் மார்கெட்டிங்கில் உள்ள வாய்ப்புகள் மற்றும் பயன்பாடுகள் மாணவர்கள் படிக்கும் பொழுது எவ்வாறு டிஜிட்டல் மார்கெட்டிங்கை பயன்படுத்தி சம்பாதிக்கமுடியும் என எடுத்துகூறினார்கள்
இந்த கருத்தமர்வில் சிறப்பு அமர்வாக வணிகவியல் துறை (CA)யில் பயின்ற முன்னாள் மாணவர் அபிஷேக் உருவாக்கிய DUKA செயலியின் பயன்படுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இக் கருத்தமர்வினை வணிகவியல் துறை (CA) துறை தலைவர் ரெஜிஸ் தலைமைவகித்தார். துணை முதல்வர் முனைவர். மகேஷ்வரி, வணிகவியல் துறை (CA) மன்றத் தலைவர் பேராசியர் அற்புதசகாயராஜ், மற்றும் துறை பேராசியர்கள் வணிகவியல் துறை மாணவர் மன்ற செயலாளர்கள் முன்னிலை வகித்தனார். 200 மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை பாதுகாப்போம் என உறுதிமொழியும் அதனை விளக்கும் குறும்படமும் திறையிடப்பட்டது.
டிஜிட்டல் மார்கெட்டிங் ஏன்?
- 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஆன்லைன் நிர்வாகத்திற்கு மாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
- தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவதால், அதற்கேற்றார் போல் தொழில்முறைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே தொடர்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- சமீபத்திய ஆராய்ச்சியின் படி, டிஜிட்டல் பொருளாதாரம் பாரம்பரிய வர்த்தகத்தை விட 10 மடங்கு வேகமாக வளர்ந்து வருகிறது.
- இதனால் ஆன்லைன் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- இதற்கேற்றார் போல் புரோகிராமிங், எழுத்தாளர், மார்க்கெட்டிங் என பல்வேறு தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சோஷியல் மீடியா எக்ஸிகியூட்டிவ் & சோஷியல் மீடியா மேனேஜர்: சமூக ஊடகத்தில் வேலை என்றால் கேக்கவா வேண்டும். அதேசமயம் ட்வீட் மற்றும் ஃபேஸ்புக்கில் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் அதுவே நம் வேலைக்கு வினையாகிவிடும். இவர்கள் எழுத்தாளர் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்ச்சியாக இணைப்பில் இருப்பார்கள். ட்ரெண்டிங் செய்திகள் என்ன? தரமான கன்டென்ட் அல்லது வீடியோவை எப்படி உருவாக்குவது. சமூக சமூக வலை தளங்களில் வைலராகும் விஷயங்களை கவனிப்பது, அதை எவ்வாறு நிர்வாகத்திற்கு ஏற்ற முறையில் பயன்படுத்துவது போன்றவை இவர்களின் பணி. இதற்கு சமூக வலைதளங்களை பற்றிய ஆழ்ந்த அறிவும். சுயமாக சிந்திக்கும் திறனும் அவசியம் தேவை
