சர்வதேச வேதியியல் ஆராய்ச்சி மற்றும் இன்றைய புதிய கண்டுபிடிப்புகள்  (CRIT-2019)

0
full

வேதியியல் துறையில் பல்வேறு பிரிவு மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உணர்வூட்டும் விதமாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறையின் சார்பாக வேதியியல் ஆராய்ச்சி மற்றும் இன்றைய புதிய கண்டுபிடிப்புகள்  (CRIT-2019) என்ற பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 2018-ல் ‘கிலாவிரேட் ஆராய்ச்சி’ குழுமத்தினால் மேற்கோள் காட்டப்பட்ட, இந்திய அளவில் முதல் 10 தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற வேதியியல் அறிஞர்களுள் ஒருவரான முனைவர். ரஜினிஷ்குமார், இந்திய தொழில் நுட்ப கழகம், சென்னை  முனைவர். ஆர்.வி.மங்கலராஜா, கான்செப்சிபன் பல்கலைக்கழகம், சிலி முனைவர். எஸ்.சபியா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் முனைவர். சார்லஸ் பிரேமியோ பீட்டர், வேலூர். தொழிற்நுட்ப கழகம், வேலூர் ஆகிய வேதியியல் துறை வல்லுநர்கள் கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றினர்கள்.

நான்கு நாடுகளைச் சார்ந்த சுமார் 10 கல்வி நிறுவனங்களிலிருந்து சுமார் முந்நூறு வேதியியல் துறையைச் சார்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இக்கருத்தரங்கத்தில் பொருள் அறிவியல், ஒளி வினைவூக்கவியல், வேதித்தகவலியல், மருந்து வடிவமைப்பு, நானோ வேதியியல், பெருமூலக்கூறுகள், ஆற்றல் மற்றும் பசுமை வேதியியல் துறைகளில் சுமார் 69 ஆராய்ச்சி சுருக்க அறிக்கைகள், சுவர் இதழ்களாகப் படைக்கப்பட்டன. அவற்றின் தொகுப்பு குறுந்தகடாக வெளியிடப்பட்டது.

half 2

வேதியியல் துறையின் தலைவியும் கருத்தரங்க தலைவருமான முனைவர். ஜே.பிரின்சி மெர்லின்  கருத்தரங்கத்தின் சிறப்பம்சங்களைத் தொகுத்து வழங்கினார்கள். கல்லூரியின் அறிவியல். புலத்தலைவர் முனைவர். வயலட் தயாபரன்  வரவேற்புரை நல்கினார்கள். கருத்தரங்கத்தின் அமைப்பு செயலர் முனைவர். சு.ஏஞ்சலின் வேதா  நன்றியுரை நல்கினார்கள்.

poster

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பள்ளியின் தலைவர் முனைவர். ஆர்.ரமேஷ் நிறைவு விழா சிறப்புரையாற்றினார்கள். முனைவர். தியாகராஜன்  கருத்தரங்க ஆராய்ச்சி சுவர் இதழ்களை மதீப்பீடு செய்தார். கருத்தரங்கத்தில் ‘இளம் ஆராய்ச்சியாளர்கள்’ மிகவும் பயனுள்ள ஆராய்ச்சி மற்றும் ‘பசுமை படைப்பு’ போன்ற பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

half 1

Leave A Reply

Your email address will not be published.