கரூா் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம்.

0
Business trichy

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தின் போது கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.

சசிகலா குடும்பத்தினரின் தீவிர ஆதரவும் இவருக்கு இருந்து வந்தது. ஆனால் 2016-ஆம் ஆண்டில் ஆட்சி முடிகிற தருணத்தில் ஜெயலலிதாவுக்கு இவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. எனவே, அரவக்குறிச்சி தொகுதியில் பலம் வாய்ந்த கே.சி.பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட வைத்தார். அந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தானது. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அவர் எம்எல்ஏ-வானார்.

இதையடுத்து, டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டு அதிமுக-வில் அணிகள் இணைப்புக்குப் பின்னர், டிடிவி ஆதரவாளராக செந்தில் பாலாஜி வளம் வந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும், அக்கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் இணைந்தார்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.