ஜாக்டோ-ஜியோ சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்

0

கடந்த 22ம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல் குளக்கரை திடலில் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்க பள்ளிகளை அரசு பள்ளிகளோடு இணைப்பதை நிறுத்த வேண்டும். தொகுப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். பாலகிருஷ்ணன் வரவேற்றார். ராமு உயர்மட்டக்குழு உறுப்பினர், செல்வராஜ், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர் முருக செல்வராஜன், மாவட்ட தலைவர் தமிழ்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.