இளைஞர்களுக்கான தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி

0
1

மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மதுரை மற்றும் எம்பவர் டிரஸ்ட், திருச்சிராப்பள்ளி இணைந்து இளைஞர்களுக்கான தொழில்நுட்ப திறன் மேம்பாடு பற்றிய ஆலோசனைகள், வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு தகவல் நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை என்ற ஊரில் உள்ள நூலகத்தில் 20.01.2019 அன்று நடத்தப்பட்டது.

4

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மதுரையிலுள்ள மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின்  உதவி தொழில்நுட்ப அதிகாரி திரு. பாலா, உதவி வேலைவாய்ப்பு அதிகாரி திரு. அழகுராஜன் மற்றும் உதவி கணக்கு அதிகாரி திரு. தினேஷ் குமார், ஆகியோர் இளைஞர்களிடையே பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் உள்ள செய்முறையுடன் கூடிய  படிப்புகள்  பற்றியும்,  அப்படிப்பின் இறுதி ஆண்டில் கல்லூரி வளாக கலந்தாய்வில் இந்திய மற்றும் மேலை நாடுகளில்  100% வேலைவாய்ப்பு பற்றியும் எடுத்துக் கூறினர். குறிப்பாக மருத்துவத் துறை, கணிப்பொறி துறையில் பிளாஸ்டிக்ஸ் பயன்பாடு அதிகமாக உள்ளதால் தொழில் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினர்.  மேலும் பிளாஸ்டிக்ஸ் தொழிலில்  தொழில்முனைவோராக வர விரும்பும் இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க வங்கி மூலம்  கடன் பெறும் வசதியை இக்கல்லூரி வழிக்காட்டுவதையும் விளக்கினர். மற்றும் பிளாஸ்டிக்ஸ்  மறுசுழற்சி தொழிலிலும் ஆண் பெண் பேதமின்றி இளைஞர்கள் பங்கெடுத்து  தொழிலில் முன்னேறலாம் என்றனர்.

2

இறுதியாக எம்பவர் டிரஸ்ட், நிர்வாக இயக்குநர் முனைவர். கனிமொழி, வரவேற்றார். எம்பவர் டிரஸ்ட்  உறுப்பினர் திரு. தங்கத்துரை இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.