ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

0
Business trichy

நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர். இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி, நாம் செய்யும் தொழில், வேலை, சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர். இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும், நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான, செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.

பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும், மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம். இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும், வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும், ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து, தினசரி வாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர். தர்மத்தை மதித்து, தனது வாழ்க்கையையும், தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.

ஆம், நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

Kavi furniture

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் என்ன?

பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது; அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர். அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்; அதனால், நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்; அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி, குபேரன் கிடையாதா? யார் சொன்னது. இவர்களே செல்வத்துக்கு அதிபதி. மஹா விஷ்ணு,மஹா லட்சுமி, குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:

1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,

2.சென்னை அருகே இருக்கும் வானகரம்

3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது.

4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.

5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி

6.சிதம்பரம் கோவில்

7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்

8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம் (சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்)

9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை

10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்

 

11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி (கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)

12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி

13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி, ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,    ரத்தினசாமி நகர், ஆர்.எம்.எஸ்.நகர் அருகில், நஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-6.

MDMK

15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில், ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில் புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம், சேங்கல்மலை,கரூர்

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில், ஞானமேடு, தவளக்குப்பம் அருகில், பாண்டிச்சேரி.

இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார். எனவே, இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.

17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.

18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்(சொர்ணதா தேவியுடன்), ஸ்ரீசொர்ண கணபதி திருக்கோவில், பாரதியார் நகர், கைகாட்டி வலசு, ஈரோடு.

 

இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும். அவ்வாறு ஜபித்தால், பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

1.வர வேண்டிய பணம் வந்துவிடும்.

2.தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்; எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்; வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.

4.சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்

5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;

6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.

7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

 

#ஸ்ரீசொர்ண_பைரவரின்_மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்

ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ

ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ…!!!

 

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.